Heat wave file pic (Photo credit: healthshots)

மே 11, சென்னை (Health Tips): அக்னி நட்சத்திரம் என்று கூறினாலே கோடையில் வெயிலின் தாக்கம் தான் நினைவில் வரும். இவ்வாறான நெருக்கடி மிகுந்த கோடையை நாம் எச்சரிக்கையுடன் கடக்க வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்த தகவலை இன்று தெரிந்துகொள்ளுங்கள்.

நிறத்தின் தேர்வு: அடர்ந்த நிறம் கொண்ட துணிகளை கோடையில் அணிய கூடாது. வெளிர்ந்த நிறம் அல்லது வெள்ளை நிரந்திநலன் ஆடைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது, பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.

காபின் பானங்கள்: நாம் குடிக்கும் செயற்கை குளிர்பானங்களில் காபின் கலந்த பானங்கள் நீரிழப்பை ஏற்படுத்தும். அவற்றை பருக இதமாக இருப்பினும், கோடையில் அவை உடலுக்கு கேடு. அதேபோல மதுவையும் தவிர்க்க வேண்டும். Chennai RMC Update: இன்று 11 மாவட்டங்களில் கனமழை; வெளுத்து வாங்கப்போகும் கடும் வெயில்… எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

இயற்கை பழச்சாறுகள்: கோடைகாலத்தில் ஏற்படும் வெயிலின் தாக்கம் காரணமாக உடலில் இருக்கும் வியர்வை வழியே சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் வெளியேறும். அதனை ஈடு செய்ய எலுமிச்சை சாறு, இளநீர், மோர், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை குடிக்க வேண்டும்.

கொழுப்பு உணவுகள்: புரதம் மற்றும் கொழுப்புகள் இருக்கும் உனவுகள் செரிமானமாக நேரம் எடுக்கும். இவை உடலின் வெப்பநிலையை அதிகப்படுத்தும். உடலை நீர்ப்புடன் வைக்கும் காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது நல்லது.

உணவு வேளை மாற்றம்: வழக்கமாக நாம் காலை-மதியம்-இரவு என 3 வேளை சாப்பிடுவதை, கோடையில் ஐந்து வேலையாக பிரித்து சாப்பிட வேண்டும். இவை செரிமானத்திற்கும் நல்லது, உடல் ஆற்றலுடன் செயல்படும்.

சூரியனுடன் தொடர்பு: நாம் வெளியில் செல்லும் போதும், வீடுகளுக்கு திரும்பும் போதும் இயன்றளவு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க, தலையை பாதுகாக்க குடை அல்லது தொப்பியை உபயோகம் செய்யலாம். காலை 11 மணிமுதல் மாலை 3 மணிவரையில் வெளிப்பயணத்தை தவிர்க்க முயற்சிக்கலாம்.

நீச்சல்: கோடை காலத்தில் நாம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் பட்சத்தில், அவை உடலின் வெப்பத்தை அதிகரிக்க உதவும். காலை அல்லது மாலை வேளைகளில் நடைப்பயிற்சி செல்லுதல், சைக்கிள் ஓட்டுதல் புத்துணர்ச்சி வழங்கும்.