Respective: Baby Sad & Smile

டிசம்பர், 11: நம் வீட்டில் உள்ள குழந்தைகள் (Babies Carrying) எப்போதும் பிடித்த பொருட்களை கேட்டு அடம் செய்வது இயல்பான விஷயம் ஆகும். அவர்களின் விருப்பத்திற்கேற்ப எந்த விஷயமாக இருந்தாலும் செய்ய முனைவார்கள். இவ்வாறான குழந்தைகளை உடனடியாக சிரிக்க வைக்கிறேன் என விருப்பத்தை நிறைவேற்றுவது தவறான செயல்.

குழந்தைகள் விரும்பும் பொருட்கள், அதற்கான காரணங்கள் ஏற்புடையதா? என்பதை உறுதி செய்தே அவர்களது கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். அவை ஏற்புடையதாக இல்லை என்ற பட்சத்தில், அதனை கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. நாம் எதற்காக அதனை மறுக்கிறோம் என்பதை புரிய வைக்க வேண்டும். அதற்கான முயற்சியிலாவது ஈடுபட வேண்டும். Top10Movies: அடேங்கப்பா.. ரிலீசுக்கு முன்பு வரவேற்பை பெற்ற டாப் 10 படங்கள்.. ரிலீசுக்கு பின் என்ன ஆனது தெரியுமா?.! 

Cute Baby

நாம் அதனை செய்யாமல் விட்டால் குழந்தைகளின் பிடிவாத எண்ணம் என்பது அதிகரிக்கும். அவர்களின் செயல்பாடுகளில் மாற்றமானது ஏற்படும். மன ரீதியிலான பாதிப்பு ஏற்படும். பெற்றோர் மீதான நம்பிக்கையை குறைய வைக்கும். அதேபோல், அழுவதால் விருப்பப்படி செய்யமாட்டேன் என விவாதமும் கூடாது.

குழந்தைகள் ஒரு பொருள் குறித்து ஆராய விரும்பிவிட்டால், அவர்களுக்கு அதனை அடைய வேண்டும் என்ற எண்ணமே இருக்கும். மாற்றாக நாம் கூறுவதை செவிகொடுத்து கேட்க தயாராக இருக்கமாட்டார்கள். ஆதலால், அவர்களை திசைதிருப்பி பிற விஷயத்தில் கவனத்தை திருப்ப வேண்டும். அதன்பின்னர், அவர்களின் கோரிக்கை மறுப்புக்கான காரணத்தை கூறலாம்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 07:27 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).