Representative: Face Beauty

டிசம்பர், 11: நமது இயற்கை அழகை (Natural Face Beauty) சற்று மேம்படுத்தி காட்டுவதுதான் மேக்கப் (Makeup). நமது சருமத்தின் நிறம், முகத்தின் வடிவத்திற்கு ஏற்ப மேக்கப் செய்துகொள்ளுதல் கூடுதல் தோற்ற சிறப்பை எடுத்து காண்பிக்கும். மாசடைந்த சூழல். தூசு போன்றவையால் சருமத்தின் பொழிவு என்பது குறைய தொடங்கும்.

இவ்வாறான பிரச்சனையை எதிர்கொண்டு முகத்தின் அழகை தக்கவைக்க வாரம் ஒருமுறை வீட்டில் கடலை மாவு, எலுமிச்சை சாறு, ரோஜா பன்னீர் சேர்ந்து தேய்த்து முகத்தில் பூசி, அதன்பின் முகத்தை கழுவி வந்தால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் விரைந்து நீங்கும்.

அதேபோல, அழகுக்கலை நிபுணர் மூலமாக பேசியல் செய்வது முகப்பொலிவை அதிகரிக்கும். குளிரூட்டி உள்ள அறைகளில் இருப்போர் சருமங்களில் சிறப்பான கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் ஏ.சி அறைகளில் இருப்பது தோள்களின் இயற்கை எண்ணெய் தன்மையை குறைக்கும். வறட்சியை ஏற்படுத்தும். AadharCard Name Update: 5 நிமிடத்தில் உங்களின் ஆதார் கார்டில் பெயர் திருத்தம் செய்வது எப்படி?.. உங்களுக்கான பதில் இதோ..! 

ஆதலால், ஏசி அறைகளில் பணியாற்றுவோர் மாய்ஸ்சுரைசர் பூசலாம். உடலுக்கு தேவையான தண்ணீரையும் குடிக்க வேண்டும். உங்களின் முகத்தில் முகப்பருக்கள் இருந்தால், அதனை கிள்ளுதல் கூடாது. அவ்வாறு பருக்களை நாம் கிள்ளுவது நிரந்தரமான வடுவாக அதனை ஏற்படுத்தும். வாரம் ஒருமுறை நீராவி பிடிக்கலாம். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.

அடிக்கடி கோபம், கவலை போன்றவை முகத்தில் சுருக்கத்தை அதிகப்படுத்தும். மனதை இயன்றளவு அமைதியாக வைக்க வேண்டும். காய்கறிகள் & பழங்களை அதிகளவு சாப்பிட்டால் வைட்டமின் ஈ, வைட்டமின் சி போன்றவை கிடைக்கும். சருமத்தின் பொலிவுக்கு வைட்டமின் ஈ, சி முக்கியம்.

மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாவண்ணம் உடலை பார்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உறங்க செல்வதற்கு முன்பு செயற்கையான மேக்கப் போட்டு அன்றைய நாளில் வெளியே சென்று வந்தால், அதனை கட்டாயம் நீரினால் சுத்தம் செய்தே உறங்க வேண்டும்.

இயற்கையான சரும பராமரிப்பு பொருட்களே உடலுக்கு நல்லது. ரோஜா இதழ், புதினா, வேப்பிலை சேர்த்து நீரில் கொதிக்கவைத்து, அந்நீரை வடிகட்டி ஐஸ்டிரேயில் ஊற்றி வைத்து கட்டிகளாக மாற்ற வேண்டும். பின், அந்த ஐஸ் கட்டியை எடுத்து முகத்தில் மென்மையாக தடவி மசாஜ் செய்தால், முகத்தின் பொலிவு என்பது அதிகரிக்கும். இரவு நல்ல உறக்கமும் அதிமுக்கியம்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 07:57 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).