டிசம்பர், 10: நவீன தொழில்நுட்பம் கொண்ட கலியுகத்தில் நமது தேவைக்காக பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்களால் பல தீங்குகள் ஏற்படுகிறது. இதனை உடலளவில் நாம் அனுபவிக்க தொடங்கிவிட்டோம். இன்றுள்ள காலத்தில் இளம் வயதில் இருக்கும் இளைஞர்கள் வெள்ளை முடி (Gray Hair) பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.
இவை பலரால் இயற்கை என ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், சிலர் அதனை பெரிய பிரச்சனை என கருதி தாழ்வு மனப்பான்மை எண்ணத்தையும் வளர்த்துவிடுகின்றனர். இளம் வயதில் ஏற்படும் வெள்ளை முடி பிரச்சனை மரபணு காரணத்தினால் வரலாம். இவை நமது அன்றாட உணவு மற்றும் வாழ்க்கை முறையுடனும் தொடர்பு கொண்டது. Frog Travel Snake: கொழுப்போ கொழுப்பு.. பாம்பின் மீது வளைந்து வழுக்கி பயணிக்கும் தவளை.. அட்ராசிட்டி வீடியோ வைரல்.!
ஆரோக்கியமான உனவுகளை நாம் சாப்பிட்டால் வெள்ளை முடி பிரச்சனை ஏற்படாது. ஏனெனில், முடியின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு பல ஊட்டச்சத்துக்கள் தேவைப்பட்டிருக்கின்றன. நமக்கு வைட்டமின் பி குறைபாடு இருப்பின் அவை மோசமான பின்விளைவை ஏற்படுத்தும். அதன் விளைவாகவே தலைமுடி வெள்ளை நிறத்தினை அடைகிறது.
சிறுவயதிலேயே நரைமுடி பிரச்சனை இருப்பின் வைட்டமின் பி, பி6, பி12 போன்ற சத்துக்கள் உள்ள உணவுகளை தேடி சாப்பிட வேண்டும். காளான்கள், பருப்பு வகைகளை சாப்பிட வேண்டும். அதேபோல, தினமும் தலைக்கு கலப்படமற்ற சுத்தமான எண்ணெய் தேய்ப்பது, வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்து உடல் சூட்டை தனிபோது போன்றவையும் முடியின் ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்யும்.