செப்டம்பர் 29, சென்னை (Cooking Tips): புரட்டாசி மாதம் தொடங்கிவிட்டால், அசைவ வகை உணவுகளுக்கு பெரும்பாலான வீடுகளில் தடை விதிக்கப்படும். சிலர் விதிவிலக்காக சாப்பிடுவார்கள். சைவ வகையோ - அசைவ வகையோ உணவு சாப்பிடுவது அதனை தேர்ந்தெடுப்பவரின் விருப்பம் என்பதே இயற்கை நியதி.
புரட்டாசி மாதத்தில் அசைவ வகை உணவுகளை சாப்பிடுவது உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்தும். பருவகால சூழ்நிலை காரணமாக மழை முடிந்து-தொடங்கும் காலத்தில் இவ்வகை நோய்கள் சாதாரணம் எனினும், அசைவ வகையிலான உணவுகள் அவற்றை விரைந்து பரப்பும் தன்மை கொண்டவை. ஆகையாலேயே இம்மாதத்தில் அசைவ வகை உணவுகள் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது.
இன்று புரட்டாசி மாத சிறப்பாக சாம்பார் சாதம் (Sambar Satham) செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம். அசைவ பிரியராக இருப்பினும், இம்முறையில் செய்யப்படும் சுவையான சாம்பார் சாதம் கட்டாயம் உங்களை கவர்ந்திழுக்கும். Aranmanai 4: பொங்கலுக்கு அட்டகாசமாக களமிறங்குகிறது சுந்தர் சி-யின் அரண்மனை 4: பேய் விருந்துக்கு தயாராகுங்கள்.!
சாம்பார் சாதம் செய்யத் தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கிண்ணம்,
துவரம் பருப்பு - 1 கிண்ணம்,
கடலை பருப்பு - 1 1/2 கரண்டி,
மல்லி - 1 கரண்டி,
மிளகு - 1 கரண்டி,
உளுந்து - 1 கரண்டி,
சீரகம் - 1 கரண்டி,
காய்ந்த மிளகாய் - 4,
கறிவேப்பில்லை - சிறிதளவு,
கொத்தமல்லி தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
கடுகு & உளுந்து தாளிக்க - தேவையான அளவு,
நெய் - 3 கரண்டி,
பச்சை மிளகாய் - 2,
கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, கேரட் - தலா 1,
தேங்காய் துருவல் - சிறிதளவு,
சின்ன வெங்காயம் - 20,
தக்காளி - 2,
பெருங்காயம் - சிறிதளவு,
முந்திரி பருப்பு - 5.
செய்முறை:
முதலில் அரிசி, துவரம்பருப்பு ஆகியவற்றை 2:1 என்ற விதிமுறைப்படி, 2 கிண்ணம் அரிசிக்கு 1 கிண்ணம் துவரம் பருப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். அரிசி, பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கழுவ வேண்டும். கழுவிய அரிசி-துவரம்பருப்பை குக்கரில் சேர்த்து அரிசியை எடுத்த அளவையே வைத்து 4 கிண்ணம் வீதம் நீர் சேர்த்து அரிசி-பருப்பு குழையும் வரையில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். குக்கரில் 4-5 விசில் வைக்கலாம்.
பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு ஒன்றரை கரண்டி, தலா ஒரு கரண்டி மலி, மிளகு, உளுந்து, சீரகம், காய்ந்த மிளகாய், காய்ந்த கறிவேப்பில்லை ஒரு கொத்து சேர்த்து நன்கு வருக வேண்டும். இதனோடு இறுதியாக தேங்காய் துருவலையும் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இவை நன்கு ஆறியதும் மிக்சியில் இட்டு பவுடராக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிச்சங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் மற்றும் பழுத்த தக்காளிகளையும் பொடிப்படியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
புளியையும் எடுத்து ஊறவைத்து தனியாக புளிக்கரைசலை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அகலமான கடாயினை வைத்து எண்ணெய் ஊற்றி முதலில் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். அதன்பின் மஞ்சள் தூள், பெருங்காயம், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும். Andhra Court Denies Bail: அமராவதி இன்னர் ரிங் ரோடு சீரமைப்பு வழக்கில், நர லோகேஷுக்கு ஜாமீன் ரத்து: உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.!
இவை வதங்கியதும் காய்கறிகளை சேர்த்து 1 நிமிடம் கடந்தபின், காய்கறிகள் வேகும் அளவு நீர் ஊற்றி, அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களையும் சேர்க்க வேண்டும். உப்பு தேவையான அளவு சேர்த்து ஒரு கொதி வந்ததும், புளிக்கரைசலை சேர்க்க வேண்டும். இறுதியாக அப்பாத்திரத்தில் நன்கு கொதிவந்ததும் பருப்பு-அரிசி சேர்த்து நன்கு கிளறிவிட்டு அடுப்பை மூடிவிட வேண்டும்.
10 முதல் 15 நிமிடம் கழித்து உப்பு-காரம் அனைத்தையும் சோதித்துவிட்டு, மற்றொரு அடுப்பில் கரண்டியை வைத்து நெய் சேர்த்து முந்திரி, கடுகு, உளுந்து, சீரகம், காய்ந்த மிளகாய் 2, கறிவேப்பில்லை, பெருங்காயத்தூள் சேர்த்து கடுகு பொரிந்ததும் சாம்பார் சாதத்தில் சேர்த்து கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் சுவையான சாம்பார் சாதம் தயார்.