Mutton Biryani (Photo Credit : Youtube)

ஜூன் 05, சென்னை (Cooking Tips Tamil): என்னதான் வீட்டில் விதவிதமாக பிரியாணி செய்து சாப்பிட்டாலும், கடை சுவை வரவே இல்லையே என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். அந்த வகையில் இன்று மதுரை ஸ்டைலில் மட்டன் தம் பிரியாணி செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். பிரியாணி ஒவ்வொருவருக்கும் பிடித்த உணவாக கொரோனாவுக்கு பின் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. Health Tips: தூக்கமின்மையால் அவதிப்படுறீங்களா?.. உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!

தேவையான பொருட்கள் :

மட்டன் - ஒரு கிலோ,

சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ,

பெரிய வெங்காயம் - ஆறு,

பச்சை மிளகாய் - ஐந்து,

தக்காளி - நான்கு,

பூண்டு, இஞ்சி - 150 கிராம்,

தயிர் - இரண்டு கப்,

எலுமிச்சை சாறு - 2 கரண்டி,

நெய் - 250 மில்லி,

தேங்காய் - ஒன்று,

மிளகாய் தூள் - 2 கரண்டி,

கரம் மசாலா - 2 கரண்டி,

பிரியாணி தூள் - 2 கரண்டி,

கடலை எண்ணெய் - ஒரு கிண்ணம்,

பிரியாணி இலை, லவங்க பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ - நான்கு,

மல்லி, புதினா - அரை கட்டு,

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் எடுத்துக் கொண்ட மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் சோம்பு சேர்த்து சோம்பு பொறிந்த பின்னர் வெங்காயம், புதினா இலைகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.

இவை நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். ருசிக்கு தேவையான அளவு மிளகாய் தூள், பிரியாணி தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும். முன்னதாகவே அரைத்து வைத்த தேங்காயை பாலெடுத்து வைக்க வேண்டும்.

பின் மட்டன், சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தண்ணீரில் தனியாக கொதிக்க வைத்து 15 நிமிடங்கள் கழித்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சீரக சம்பா அரிசியை 30 நிமிடம் நீரில் ஊற வைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து குக்கரில் வதங்கிய பொருட்களுடன் மட்டன் மற்றும் அரிசியை சேர்த்து ஒரு கப் அரிசிக்கு 1,3/4 கப் முதல் இரண்டு கப் வரை மட்டன் வேகவைத்த தண்ணீர் சேர்த்து, தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கினால் சுவையான மட்டன் பிரியாணி தயார்.

இறுதியில் தம் போட்டு இறக்கி, சுவையாக இருக்கும் தம்மில் இருந்து எடுத்ததும் சிறிதளவு நெய் கலந்து தயிர், வெங்காயம் வைத்து சாப்பிட கடை சுவை அப்படியே இருக்கும்.