ஜனவரி 15, சென்னை (Kitchen Tips): ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், பண்டிகை காலத்திலும், அதன் தொடக்கத்தில் சைவ உணவுகளுக்கு அளிக்கப்படும் மதிப்புகளைப்போல, அசைவ விரும்பிகள் தங்களுக்கு பிடித்த அசைவ வகை உணவுகளை ருசித்து சாப்பிடுவது இயல்பானது. அந்த வகையில், பொங்கல் பண்டிகையின் நிறைவில் பலரும் ஆடு, மீன், சிக்கன் என தங்களுக்கு பிடித்த அசைவ வகை உணவுகளை வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். கடல், நாட்டு மீன்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தருபவை ஆகும். இன்று மீனில் சுவையான குழம்பு செய்வது மற்றும் மீனை ருசியாக பொறித்து எடுப்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். எந்த வகை மீன் குழம்பாக (Fish Curry Tamil) இருந்தாலும், நீங்கள் இம்முறையை பயன்படுத்தி சமைத்து ருசிக்கலாம். Health Tips: எந்நேரமும் உட்கார்ந்தபடியே வேலையா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!
சுவையான மீன்குழம்பு (Meen Kulambu Seivathu Eppadi) செய்யும் முறை:
செய்யத்தேவையான பொருட்கள்:
மீன் - அரை கிலோ,
புளி - இன்ச் அளவு,
மிளகாய் தூள் - 3 கரண்டி,
சீரகத்தூள் - 3 கரண்டி,
சிறிய வெங்காயம் - 50 - 75 கிராம்,
மஞ்சள் தூள் - 1/2 கரண்டி,
மல்லித்தூள் - 1 கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - தேவையான அளவு,
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 2 கரண்டி,
கடுகு - 1 கரண்டி,
தேங்காய் விழுது - கால் / அரை முறி.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட மீனை நன்கு செதில்கள் உரைத்து கழுவி, வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்கொண்ட கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து வதக்க வேண்டும். பின் தேவையான அளவு சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும். வெங்காயம் பகுதியளவு வந்ததும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
புளிக்கரைசலை தயார் படுத்திக்கொள்ளவும். புளிக்கரைசலில் சீரகத்தூள், மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு கரைத்து, அதனை கடாயில் வெங்காயம் - தக்காளியுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பு கொதிக்கத் தொடங்கியதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து மீனை சேர்த்து, 10 - 15 நிமிடம் கொதித்தபின் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து இறக்கினால் சுவையான மீன் குழம்பு தயார். மீன் குழம்பு மாசாலாவை அரைத்து சேர்ப்பது நல்லது.
மீன் குழம்பு மசாலா (Fish Kulambu Masala):
தனியா - 6 கரண்டி,
சீரகம் - 1 1/2 கரண்டி,
சோம்பு - 2 கரண்டி,
மிளகு - 1/2 கரண்டி
காய்ந்த மிளகாய் - 15 முதல் 25
கடுகு - 1 கரண்டி,
வெந்தயம் - 1/2 கரண்டி
துவரம்பருப்பு - 1 கரண்டி,
கடலைப்பருப்பு - 3 கரண்டி,
அரிசி - 2 கரண்டி,
கல் உப்பு - சிறிதளவு,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
கறிவேப்பில்லை - கைப்பிடியளவு
நிறத்திற்கு தேவை என்றால் காஷ்மீரி வர மிளகாய் 10 சேர்த்துக்கொள்ள வேண்டும். Sivappu Aval Nanmaigal: சிவப்பு அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. அசத்தல் தகவல் இதோ.!
வதக்கி அரைக்கும் மீன் குழம்பு மசாலா (Fish Curry Masala):
எண்ணெய் - 1 கரண்டி,
பூண்டு - 10 பற்கள்,
சின்ன வெங்காயம் - 20,
சீரகம் - 1 கரண்டி,
மிளகு - 1 கரண்டி,
தக்காளி - 2,
குழம்பு மிளகாய் தூள் - 3 கரண்டி,
காஷ்மீர் மிளகாய் தூள் - 1 கரண்டி,
நீர் - தேவையான அளவு.
வதக்கி அரைத்து மீன் குழம்பு வைக்க நினைப்போர், இம்முறையை பின்பற்றலாம். மீன் குழம்பு செய்முறையை பொறுத்தமட்டில், அது ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றாற்போல மாறுபடும்.
மீன் வறுவல் (Fish Fry Tamil) சுவையாக செய்ய:
சின்ன வெங்காயம் - 10,
பூண்டு - 5,
இஞ்சி - சிறிதளவு,
கொத்தமல்லி & கறிவேப்பில்லை - சிறிதளவு,
கரம் மசாலா - 1/2 கரண்டி,
சீரகப்பொடி - 1/2 கரண்டி,
மிளகுத்தூள் - 1/2 கரண்டி,
குழம்பு மசாலா - 1/2 கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 கரண்டி,
கான் பிளவர் மாவு - 1 கரண்டி,
கடலை மாவு - 1 கரண்டி,
அரிசி மாவு - 1 கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எலுமிச்சை சாறு - சிறிதளவு,
மீன் வறுவல் செய்முறை (Meen Varuval Seimurai):
முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தோல் உரித்து, கொடுக்கப்பட்டுள்ள பிற பொருட்களையும் சேர்த்து மிக்சியில் நன்கு மைப்பட அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் இறுதியாக சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து, மிதமான தண்ணீர் - கட்டியான பதத்திற்கு கொண்டு வந்து, மீனின் மீது சேர்த்து 10 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை ஊறவைத்து எடுக்க வேண்டும். பின் தோசைக்கல் அல்லது எண்ணெயில் சேர்த்து மீனை பொரித்தால், சுவையான மீன் வறுவல் தயார்.