Milk / Paneer (Photo Credit : Pixabay)

மே 19, சென்னை (Cooking Tips Tamil): சரியாக சேகரிக்கப்படாத பால் விரைந்து கெட்டுப் போகிறது. குறிப்பாக கோடைகாலத்தில் இவ்வாறான பிரச்சனையை பலரும் எதிர்கொள்ள நேரிடும். பால் ஒருவேளை கெட்டுப்போய்விட்டது என்றால் அதனை கீழே ஊற்றுவதற்கு பதிலாக வீட்டிலேயே எளிமையான முறையில் பன்னீர் செய்யலாம். பால் கொண்டு பன்னீரை வீட்டில் செய்ய இது எளிய நடைமுறை ஆகும். Health Tips: குழந்தைகளுக்கு டீ கொடுக்குறீங்களா?.. டாக்டர் சொல்லும் ஷாக் தகவல்.!! 

தேவையான பொருட்கள் :

திரிந்த பால்

பருத்தித் துணி

வடிகட்ட கனமான அடிப்பகுதி கொண்ட பாத்திரம் அல்லது பானை

செய்முறை :

முதலில் பால் திரிந்து போய் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் அல்லது கொதிக்கும் பாலில் சிறிதளவு எலுமிச்சையை சேர்த்தால் பால் திரிந்து கட்டி படும்.

பின் பால் மொத்தமும் சுண்டி கட்டிகள் இருக்கும் அளவுக்கு காய்ச்சி எடுத்துக்கொண்டு, பாத்திரத்தில் துணி வைத்து அதில் திரிந்த பாலை சேர்த்து வடிகட்டி எடுக்க வேண்டும்.

தண்ணீர் எல்லாம் வடிந்து பால் ஆடை பகுதி மட்டும் மேலே அப்படியே இருக்கும். இதன்பின் அதனை உங்களுக்கு பிடித்த பாத்திரத்தில் சேகரித்தும் வைத்துக் கொள்ளலாம்.

இளம் சூடு உள்ள நீரில் கழுவி துணியை இருக்க பிழிந்து பன்னீர் கெட்டியாகும் வரை கனமான பாத்திரம் கொண்டு அழுத்த வேண்டும். இப்போது துணியை திறந்து பார்த்தால் பன்னீர் தயார். அதனை வெட்டி பன்னீரில் உங்களுக்கு பிடித்த உணவை செய்து சுவைபட சாப்பிடலாம்.