ஆகஸ்ட் 30, சென்னை (Health Tips): இயற்கை மனிதனுக்கு தந்த கொடைகளில், உடலுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை தடுக்கவல்ல மருத்துவ குணம் கொண்டது துளசி (Thulasi / Holy Basil). வீட்டிலும், அதற்கு அருகே இருக்கும் நிலப்பகுதியில் வளரும் தன்மை கொண்ட துளசியை நாம் கோவில்களில் பிரசாதமாக பெரும்பாலும் வாங்கி சாப்பிட்டு இருப்போம்.
அதனை வீட்டில் வளர்த்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். குளிர் மற்றும் மழை காலங்களில் ஏற்படும் சளித்தொல்லை நீங்க தேநீரிலோ அல்லது சாதாரண நீரிலோ இட்டு கொதிக்கவைத்து குடித்து வந்தால் சளித்தொல்லை நீங்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைத்து, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
துளசியில் இருக்கும் இயற்கையான நோயெதிர்க்கும் திறன் சரும பிரச்சனையை தடுக்கும் மருந்து ஆகும். கைப்பிடியளவு துளசி இலையுடன் சிறிதளவு தயிர் சேர்த்து பசைபோல் அரைத்து, அதனை முகத்தில் பூசி 15 நிமிடம் சென்றதும் குளிர்ந்த நீரில் கழுவினால் முகப்பரு, அதனால் ஏற்படும் தழும்பு போன்றவை சரியாகும். வாரம் 3 நாட்கள் இதனை செய்யலாம்.
எண்ணெய்ப்பசை தன்மை நீங்குவதற்கு கைப்பிடியளவு துளசி இலையை பசைபோல் அரைத்து,எலுமிச்சை பழச்சாறு சிறிதளவு கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவ வேண்டும். வாரம் 2 நாட்கள் இவ்வாறு செய்ய, முகத்தில் இருக்கும் எண்ணெய்ப்பசை தன்மை நீங்கும். Madurai Crime: 17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தையை ரூ.8 இலட்சத்திற்கு விற்ற 5 பேர் கைது.. செவிலியர், வழக்கறிஞருக்கு வலைவீச்சு..!
முகத்தில் ஏற்பட்டு இருக்கும் சுருக்கங்கள் மறைவதற்கு, கைப்பிடியளவு துளசி இலையை சிறிதளவு நீர் விட்டு கொதிக்க வைத்து, அந்நீரை குளிர்வித்து, அந்நீரை கொண்டு முகத்தினை கழுவ வேண்டும். இவ்வாறாக தினமும் செய்துவர, முகத்தில் இளமை அதிகரிக்கும்.
முகம் பொலிவு பெறுவதற்கு துளை இலைகளை நீரில் சேர்த்து கொதிக்கவைத்து, அந்நீரை குளிர வைத்து எடுத்த்துக்கொள்ள வேண்டும். பின் அந்நீருடன் சிறிதளவு சந்தானம் சேர்த்து முகத்தில் பூசி 10 நிமிடத்திற்கு பின் முகம் கழுவ, முகத்தின் பளபளப்புத்தன்மை அதிகரிக்கும்.
துளசி இலைகளை சிறிதளவு எடுத்துக்கொண்டு, அதனை நன்கு அரைத்து முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து முகத்தில் பூசி, நன்கு உலர்ந்ததும் ஈரமான துணியால் முகத்தை துடைத்து எடுக்க, சருமத்தில் இருக்கும் கருமை நீங்கும். இதனை வாரம் ஒருமுறை செய்யலாம்.
முக வறட்சி நீங்குவதற்கு 2 கரண்டி துளசி பொடியுடன், 1 தே. கரண்டி முல்தானி மெட்டி, 1 தே. கரண்டி தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கடந்து முகத்தை கழுவினால் சரும வறட்சி நீங்கும். முகம் ஈரப்பதத்தை கொண்டிருக்கும். வாரம் ஒருமுறை இம்முறையை மேற்கொள்ளலாம்.
சரும புத்துணர்ச்சிக்கு துளசியுடன் புதினா மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பசைபோல அரைத்து, பின் முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி உலர்ந்த பின் கழுவினால் சருமம் புத்துணர்ச்சி அடையும்.