Palm Oil (Photo Credit: Wikipedia)

ஏப்ரல் 26, சென்னை (Health Tips): வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் பலவிதங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் முந்தைய காலங்களில் பிரதானமாக தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டு வந்தது. வடமாநிலங்களில் கடுகு எண்ணெய்யும் சமையலுக்கு பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. இன்றளவில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட எண்ணெய் எனப்படும் ரீபைண்ட் எண்ணெய்கள் சந்தைகளில் பிரதானமாக விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவு மற்றும் அதிக கிடைக்கிறது என மக்கள் ரீபைண்ட் எண்ணெய்கள் பக்கமும் திரும்பி இருக்கின்றனர். விபரம் அறிந்தவர்கள் ரீபைண்ட் எண்ணெய்களை ஒதுக்கிவிட்டு தேங்காய் (Coconut Oil) மற்றும் கடலை எண்ணெய் (Groundnut Oil) வாங்கியும் பயன்படுத்தி வருகின்றனர்.

மலேஷியா இந்தியாவிடம் அமைதிகாத்த வரலாறு: இவற்றில் பாமாயில் எனப்படும் பால்ம் (Palm Oil) மரத்தில் இருக்கும் கிடைக்கும் காய்களை கொண்டு நேரடியாக பாலம் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதுவே நமது பேச்சுவழக்கில் பாமாயில் என மருவிப்போயுள்ளது. இந்தோனேஷியா (Indonesia), மலேஷியா, நைஜீரியா, தாய்லாந்து, கென்யா, மியான்மர் ஆகிய நாடுகளில் இவை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவும் தனக்கு தேவையான பாமாயிலை அதிகளவில் மலேஷியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. அதனால்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன் மோதல் போக்கை வைத்துக்கொண்ட மலேஷியாவிடம் இருந்து இந்திய அரசு எண்ணெய் வாங்க தடை விதித்ததை தொடர்ந்து, நேரடியாக வணிக ரீதியான இழப்பை எதிர்கொள்ளவிருந்த மலேஷியா இந்தியாவிடம் சரணடைந்தது. Realme C65 5G Specifications: பட்ஜெட் விலையில் ரூ.9,999/-க்கு அசத்தல் 5G ஸ்மார்ட்போன்; ரியல்மி சி65 சிறப்பம்சங்கள் இதோ.!

பாமாயில் குறித்த சந்தேகங்கள்: நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பாமாயில், முன்பு பயோ எரிபொருளாகவும், அழகுசாதன பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. ஒருகட்டத்தில் உலகளவில் சமையல் எண்ணெயின் தேவை அதிகரித்தபோது, இயற்கையாக விளைந்த காயை கொண்டு தயாரிக்கப்பட்ட பால்ம் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால், வரலாற்றில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து மலேஷியா, நைஜீரியா உட்பட பல நாடுகளில் பால்ம் எண்ணெய் சமையலுக்கு பயன்பட்டு வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாமாயில் தொடர்பாக பல கேள்விகள், சந்தேகங்கள் மக்களுக்கு இன்றளவும் நீடித்து வருகிறது. இதனால் ஒருசில வீடுகளில் கடைகளில் கொடுக்கப்படும் பாமாயிலில், அதில் உள்ள கொழுப்புத்தன்மையை நீக்குவதற்காக கறிவேப்பில்லை, இஞ்சி, புளி உட்பட ஒருசில பொருட்களை சேர்ந்து நமது ஊர்களில் எண்ணெயை காய்ச்சி பின் வீட்டிற்கு பயன்படுத்துவார்கள்.

கொழுப்புசத்து அதிகம்: அதேபோல, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் ரீபைண்ட் எண்ணெய்கள் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் தாக்கங்கள் போன்றவை, பாமாயில் பக்கம் மக்களை திசைதிரும்ப விடாமல் பார்த்துக்கொள்கிறது. இயற்கையாக விளைந்த பொருளால் கிடைத்த எண்ணெய் உடலுக்கு தீங்கு விளைவிக்காதது ஆகும். அதனுடன் இரசாயனங்கள் சேர்க்கப்பட்டால் மட்டுமே அவை ஆபத்தானதாக மாறுகிறது. அந்த வகையில், சமையலுக்கு வழங்கப்படும் பாமாயில் எந்த விதமான ரசாயனமும் சேர்க்கப்படாதது ஆகும். பால்ம் தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் பாமாயில் எண்ணெயில் 100 கிராம் அளவில் 884 கலோரிகள் இருக்கின்றன. 15 பால்ம் பழங்களில் இருந்து 20 - 25% எண்ணெய் கிடைக்கும். பால்ம் பழத்தில் இயற்கையாக காணப்படும் வைட்டமின் ஈ உடலுக்கு நல்லது. வைட்டமின் ஈ சாது தேவைப்படுவோர் கட்டாயம் பாமாயிலை எடுத்துக்கொள்ளலாம். அதேவேளையில், பாமாயிலில் உள்ள கொழுப்புசத்து மிகமுக்கிய காரணியாக மக்களால் கவனிக்கப்படுகிறது. அதனாலேயே பெரும்பாலானோர் அதனை உபயோகம் செய்வது இல்லை.

குறிப்பு: எந்த எண்ணெயாக இருந்தாலும், அதனை அளவுடன் சமையலுக்கு பயன்படுத்தி சாப்பிடுவது உடலுக்கு எந்த விதமான தீங்கையும் ஏற்படுத்தாது. அளவு மீறும்போது கட்டாயம் அதனால் ஏற்படும் விளைவுகளை சந்தித்தாக வேண்டும்.