டிசம்பர், 11: இன்றளவில் இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை என ஒவ்வொருவரும் பலவிதமான உடல்நலக்கோளாறுடன் இருந்து வருகிறோம். இதில், இன்றுள்ள சிறார்களிடையே சாப்பிட்டவுடன் கழிவறைக்கு (Toilet After Eating) செல்லும் பழக்கம் இருக்கிறது. இது பயத்துடன் கூடிய ஆபத்தான விஷயம் இல்லை என்றாலும், ஆரோக்கியத்திற்கு நல்ல விஷயம் கிடையாது. கட்டாயம் விரைவில் சரி செய்யப்படவேண்டிய ஒன்றாகும்.
நாம் உணவை சாப்பிட்டதும் குடல் வழியே அது வயிற்றுக்குள் செல்லும். அதற்கு சராசரியாக 6 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை ஆகலாம். அதன்பின்னர் அவ்வுனவு செரிமானத்திற்கு பெருங்குடலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவை ஊட்டச்சத்துக்களை உறிஞ்சு உடலின் பிற பாகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, தேவையில்லாத கழிவுகளை மலமாக வெளியே தள்ளுகிறது.
இவ்வுளவு பெரிய நடவடிக்கையை நமது உடல் நொடியிலோ அல்லது நிமிடத்திலோ செய்கிறது என்றால், நமது உடலில் தவறான விஷயம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது அரிதமாகும். Gastrocolic Reflex என்பது உடலியல் சுழற்சி ஆகும். இவை உணவுக்கு பின்னர் கீழ் இரைப்பைக்குழாயில் இயக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. Women Self Employment: பெண்களே சுயதொழில் தொடங்குவதில் சந்தேகமா?.. எந்த தொழில் தொடங்கலாம்?.. சந்தேகமும், தீர்வும்.!
உணவு சாப்பிட்டதும் பெருங்குடலில் எதிர்வினை தூண்டப்பட்டு அவை பெருங்குடல் சுருக்கத்திற்கு வழிவகை செய்கிறது. பெருங்குடல் சுருக்கம் உடலில் செரிக்கப்பட்டு இருக்கும் உணவை மலமாக வெளியேற்ற மலக்குடலை நோக்கி தள்ளலும். இது எரிச்சலூட்டும் குடல் நோய்குறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாப்பிட்டதும் மலத்தை வெளியேற்றும் பிரச்சனையை ஏற்படுகிறது.
இந்த விளைவை சிலர் சாப்பிட்டதும் உணவை வெளியேற்றம் செய்கிறது என தவறாக நினைக்கின்றனர். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உணவு ஒவ்வாமை, சகிப்புத்தன்மை, பதற்றம், இரைப்பை அலர்ஜி, நாட்பட்ட குடல் நோய் போன்றவற்றால் ஏற்படலாம். இவை தவிர்த்து குடல் நுண்ணுயிரிகளின் மாற்றம் காரணமாகவும் ஏற்படலாம் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
காரசாரமான உணவுகளை சாப்பிடுதல், கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் குடித்தல், புகைப்பழக்கம், மதுபானம் அருந்துதல், பால் பொருட்கள் போன்றவற்றாலும் குடல் இயக்கம் தேவையற்று செயல்படுகிறது. இதற்கு மருத்துவர்களை நாடி சிகிச்சை பெற்று மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.