Indian Flag (Photo Credit : Pixabay)

ஆகஸ்ட் 11, சென்னை (Chennai News): ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நமது இந்திய தேசத்தின் சுதந்திர தினம் சிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில் 2025-ஆம் ஆண்டுக்கான சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை சிறப்பிக்கப்பட உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் மாநில அரசுகள் ஏற்பாடு செய்துள்ளன. ஒட்டுமொத்த இந்தியர்களாலும் சிறப்பிக்கப்படும் இந்திய சுதந்திர தினம் 2025-ஐ முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. Independence Day Speech: சுதந்திர தினம் பேச்சு போட்டி.. உங்களுக்கான சிறப்பு கட்டுரை இங்கே.! 

இந்தியா சுதந்திர தினம் 2025 :

அந்த வகையில் 2025-ஆம் ஆண்டுக்கான சுதந்திர தினம் இந்தியாவின் 78வது சுதந்திர தினமா? அல்லது 79வது சுதந்திர தினமா? என பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான சரியான தகவல்களை நாம் பின்வருமாறு பெறலாம். நமது இந்திய தேசம் கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் அடைந்தது. அந்த நிகழ்வின் முதல் ஆண்டு சுதந்திர தின விழா 1948, ஆகஸ்ட் 15 அன்று சிறப்பிக்கப்பட்டது. இதனால் 2025-ஆம் ஆண்டு சுதந்திர அடைந்து 78 ஆண்டுகள் முடிவடைகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டை நாம் முதல் சுதந்திர தினமாக கருதினால், 2025 ஆம் ஆண்டுக்கான சுதந்திர தினம் 79வது சுதந்திர தினமாகும். Independence Day 2025: சுதந்திர தினம் கட்டுரை; வரலாறு, தியாகத்தில் மலர்ந்த இந்தியா..! 

எத்தனையாவது சுதந்திர தினம் ?

சுருக்கமாக கூறினால் இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை 2025-ல் சிறப்பிக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற நாளே நம் இந்திய நாட்டின் முதல் சுதந்திர தினமாக கருதப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் பிரிட்டிஷாரின் காலனி ஆட்சிக்கு கீழிருந்த இந்தியா 1947-இல் விடுதலை பெற்றது. 1920 ஆம் ஆண்டு முதல் மகாத்மா காந்தி முன்னெடுத்த சுதந்திரப் போராட்டம் 27 ஆண்டுகளுக்குப் பின் வெற்றியை கொடுத்தது. ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக்கொடி நாட்டின் பிரதமரால் ஏற்றி வைக்கப்படும். இது பாரம்பரியமாக தொடரும்.