Human Heart | Heart Pulse (Photo Credit: Pixabay)

ஜூலை 23, ஆரோக்கியம் (Health Tips): உலகளவில் இளம் வயதினருக்கும் ஏற்படும் நோய்களில் மாரடைப்பு சர்வ சாதாரணமாகி வருகிறது. மாறிவிட்ட உணவு பழக்கவழக்கம், வாழ்க்கை நடைமுறை, திடீரென அதீத உடற்பயிற்சி செய்யும் மோகம் போன்ற பல காரணிகளால் இதய சார்ந்த நோய்கள் ஏற்படுகிறது.

எனினும், இதய நோய்களுக்கு மூலகாரணமாக கொழுப்புகளின் தேக்கம் இருக்கிறது. சர்வதேச அளவில் 5ல் ஒருவர் இதயநோயால் மரணிக்கின்றனர். கொழுப்பு பொருட்கள் சிறிது சிறிதாக சேர்ந்து இரத்த குழாயின் உட்புறம் படிந்து அடைப்பை ஏற்படுத்தி மரணத்தை தழுவவைக்கிறது.

கொழுப்பு படிவங்கள் குவிந்து கிடக்கும் இடங்களில் இரத்த குழாய் சுருங்கி, இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவை குறைகிறது. இவை இதயத்தின் இரத்தக்குழாய் மட்டுமல்லாது, உடலுக்குள் செல்லும் இரத்தக்குழாய் பகுதியிலும் அடைப்பை ஏற்படுத்தும். Harmanpreet Kaur: சர்ச்சையில் சிக்கிய ஹர்மன்பிரீத் கவுர்; 3 புள்ளிகளை குறைத்து அதிரடி.. எதிர்வரும் போட்டிகளில் விளையாட தடை?.!

மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய் அடைக்கப்பட்டால் பக்கவாதம் ஏற்படுவதை போல, சிறுநீர் இரத்தக்குழாய் அடைக்கப்பட்டால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதை போல, கால்களுக்கு செல்லும் இரத்தக்குழாய் அடைக்கப்பட்டால் கால் அழுகும் நிலை ஏற்படுவதை போல, இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய் அடைக்கப்பட்டால் மாரடைப்பு ஏற்படுகிறது.

மனித உடல் முழுவதிலும் இரத்தம் கொண்டு செல்லப்படுவதலை இதயம் செவ்வனே செய்கிறது. இதில் சிக்கல் ஏற்படும் பட்சத்தில், அவை உடல் முழுவதையும் பாதித்து விடுகிறது. இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்க நாம் கட்டாயம் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ளல், சத்துள்ள உணவுகளை தேவையான அளவு எடுத்துக்கொள்ளுதல், துரித மற்றும் உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவுகளை தவிர்த்தல், மது & புகைப்பழக்கம் போன்றவை இல்லாமல் இருத்தல், மனதளவில் அமைதியாக இருத்தல் போன்ற முயற்சிகள் இதயத்தை ஆரோக்கியப்படுத்தும்.