Orange | Apple | Papaya | Banana (Photo Credit: Pixabay)

ஜனவரி 10, சென்னை (Health Tips): இயந்திரமயமாகிவிட்ட காலத்தில் மனிதர்களின் செயல்பாடுகளும் தங்களது எல்லைகளை மீறி இயந்திரத்தனமாகிவிட்டது. இதனால் உடல்நலனை கூட பொருட்படுத்தாமல் வேலை, பணம் சம்பாதிக்க வேண்டும் என பல குறிக்கோள் வைத்து மனிதர்கள் செயல்பட தொடங்கிவிட்டனர். இவ்வாறானவர்கள் தங்களது உடல் நலனில் அக்கறை காட்ட மறந்தால், அது மிகப் பெரிய பின் விளைவை ஏற்படுத்தும். ஓயாது உழைத்து வரும் நாம், உடலுக்கு நன்மை தரும் காய்கறிகள் மற்றும் பழங்களை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்களை காலையில் சாப்பிடுவது, அதன் சத்துக்கள் நேரடியாக உடலுக்கு கிடைக்க வழிவகை செய்யும்.

அந்த வகையில், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய பழங்கள் குறித்த பட்டியலை இன்று காணலாம்.

1. வாழைப்பழம்: எளிதில் ஜீரணம் ஆகும் வாழைப்பழத்தில், இயற்கையான சர்க்கரை அளவு இருக்கிறது. இது விரைந்து ஆற்றலை வழங்கும். வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்திற்கு நன்மை செய்கிறது.

2. தர்பூசணி: தனக்குள் அதிக நீர்ச்சத்தை கொண்ட தர்பூசணி, உடலுக்கு நல்ல நீரேற்றத்தை வழங்குகிறது. அதேபோல, வளர்ச்சிதை மாற்றத்தையும் கட்டுப்படுத்துகிறது. உடலுக்கு தேவையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், தர்ப்பூசணியில் நிறைந்திருக்கின்றன.

3. பப்பாளி: பப்பைன் என்ற நொதிகள் நிறைந்து என்ற காணப்படும் பப்பாளி, செரிமானத்திற்கு நல்ல உதவி செய்யும். அதேபோல, இதில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, போலெட் போன்றவை உடல் நலனுக்கு ஆரோக்கியமானவை ஆகும். Patna Shocker: 8, 10 வயது சிறுமிகள் சாலையோரம் மீட்பு; ஒருவர் பலி., மற்றொருவர் உயிர் ஊசல்.. பாலியல் பலாத்காரம் & கொலை?.! 

4. ஆரஞ்சு: நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றை அதிகளவு கொண்ட ஆரஞ்சு பழம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும்.

5. ஆப்பிள்: இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட ஆப்பிள், நார்ச்சத்து மிகுந்த பழமாகும். இது உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகளை வழங்கும்.

பின்குறிப்பு & எச்சரிக்கை: மேற்கூறிய பழங்களை தினமும் சுழற்சி முறையில் காலையில் சாப்பிடலாம். அதே வேளையில், அதில் அளவு என்பது முக்கியம். வாழைப்பழம் ஆரஞ்சு போன்றவை வெறும் வயிற்றில் அதிகம் எடுத்துக்கொண்டால் ஒவ்வாமை ஏற்படும். இது குறித்த சந்தேகங்கள் இருப்பின் ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவரை கலந்தாலோசித்து செயல்படுவது நல்லது.