பிப்ரவரி 01, சென்னை (Astrology News Tamil): ஆன்மீகத்தின் அடையாளமான இந்தியாவில் உள்ள மக்கள், தங்களின் ராசி-நட்சத்திரங்களின் பலன்களை பெரிதும் நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கைக்கேற்ப முயற்சியை செய்வோருக்கு அந்தந்த காலகட்டத்தில் செல்வம் கிடைக்கிறது, அவர்களின் புகழும் மேலோங்குகிறது. ஒவ்வொரு நாளின் தொடக்கத்தையும் நாம் ராசிபலனை அறிந்து செயல்படுவது, அந்த நாளை சிறப்பாகவும், கவனமாகவும் முன்னெடுத்து செல்ல உதவுகிறது. அந்த வகையில், 01 பிப்ரவரி 2025 இன்றைய ராசி பலனை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) உங்களுக்காக வழங்குகிறது.
மேஷம் இன்றைய ராசி பலன் (Mesham Today Rasi Palan):
உங்களின் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என நினைத்தவரின் சந்திப்பு மனமாற்றத்தை உண்டாக்கும். வியாபாரத்தில் இழுபறி குறைந்து இலாபம் பெருகும். உடன்பிறந்தோரின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமான நபர்களுடன் உரையாடும்போது கருத்துக்களில் கவனம் தேவை. தன வரவில் இருந்த நெருக்கடி மறையும். ஆரோக்கிய விஷயங்களில் விழிப்புணர்வு உடனாகும். ஆதாயம் நிறைந்த நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் நீலம்.
ரிஷபம் இன்றைய ராசி பலன் (Rishabam Today Rasi Palan):
மனதளவில் இருந்த கவலை நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். சமூகப்பணியில் சாதகமான நிலை ஏற்படும். துறை ரீதியிலான ஆலோசனை கிடைக்கும். புதுவிதமான இடத்திற்கு சென்று வர வாய்ப்புகள் உண்டாகும். வாகனங்களின் வசதி மேம்படும். அரசுப்பணியில் அனுகூலமான சில விஷயங்கள் உண்டாகும். உறவினரின் வருகை மகிழ்ச்சியை தரும். ஆதரவு நிறைந்த நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் இளம் மஞ்சள்.
மிதுனம் இன்றைய ராசி பலன் (Mithunam Today Rasi Palan):
உங்களுடன் விலகியிருந்தோர் விரும்பி வருவர். உணவு விஷயத்தில் கவனம் நல்லது. தடையில் இருந்த பணிகள் நிறைவுபெறும். தெய்வீக பணியில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் நிதானம் இருக்க வேண்டும். பணி விஷயத்தில் பயணம் கைகூடும் நிலை உண்டாகும். மனதில் எழுந்த காரியம் நிறைவேறும். கணவன் - மனைவி விட்டுக்கொடுப்பது நல்லது. தோல்வி மறையும் நாளாக இன்று அமைகிறது. கிஸ்த நிறம் மஞ்சள்.
கடகம் இன்றைய ராசி பலன் (Kadakam Today Rasi Palan):
எந்த காரியத்திலும் அவசரம் வேண்டாம். வியாபார விஷயத்தில் அலைச்சல் உண்டாகும். உடன் இருப்போரிடம் அனுசரித்து செல்வது நல்லது. வரவுகள் தாமதப்படும். உயர் அதிகாரிகளிடம் பொறுமை தேவை. எதிர்பார்க்காத பொறுப்பு மாற்றத்தை உண்டாக்கும். போட்டி நிறைந்த நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் பச்சை.
சிம்மம் இன்றைய ராசி பலன் (Simmam Today Rasi Palan):
கணவன் - மனைவி ஒற்றுமை மேலோங்கும். நண்பர்களுடன் பயணம் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். தனவரவு திருப்தியை வழங்கும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி செய்தி வரும். புதிதான துறைகளில் ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தோர் பக்கபலமாக இருப்பர். இலாபம் நிறைந்த நாளாக இன்று அமைகிறது.
கன்னி இன்றைய ராசி பலன் (Kanni Today Rasi Palan):
கால்நடை வியாபாரத்தில் இலாபம் பெருகும். பிறரின் தேவை நிறைவேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். ஆசிரியர்களுடன் சந்திப்பு நிகழும், அழகு விஷயத்தில் மாற்றம் உண்டாகும். செல்வாக்கு வெளிவட்டாரங்களில் மேம்படும். பொது வாழ்க்கையில் மாற்றங்கள் இருக்கும். பணிகளில் ஆர்வம் ஏற்படும். பெருமை நிறைத்த நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் வெளிர் நீலம். Thaipusam 2025: தைப்பூசம் 2025 எப்போது? விரத முறைகள், வழிபாடுகள், சிறப்புக்கள் என்னென்ன? முழு விபரம் இதோ.!
துலாம் இன்றைய ராசி பலன் (Thulam Today Rasi Palan):
குடும்ப ரீதியிலான வருவாய் மேலோங்கும். அக்கம்-பக்கத்தில் அனுகூல நிலை உண்டாகும். நீண்டநாள் பிரார்த்தனை நிறைவேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். புதிய எண்ணம் அதிகரிக்கும். பணியிடத்தில் சக ஊழியரிடம் நிதானம் தேவை. பூர்வீக சொத்து ஆதாயத்தை கொடுக்கும். இலக்கிய பணியில் ஈடுபாடு உண்டாகும். பயம் அகலும் நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் பச்சை.
விருச்சகம் இன்றைய ராசி பலன் (Viruchagam Today Rasi Palan):
உறவினரின் வழியில் மகிழ்ச்சி செய்தி வரும். ஆரோக்கிய விஷயத்தில் ஏற்ற-இறக்க நிலை ஏற்படும். உயரதிகாரியின் எண்ணத்தை புரிந்துகொள்ளலாம். தொழில் விஷயங்களில் தொடர்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். விவசாய பணியில் மேன்மை உண்டாகும். பணிகளில் பொறுப்பு கூடுதலாகும். எதிர்பாராத உதவிகள் முன்னேற்றத்தை வழங்கும். நற்சொல் நிறைந்த நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் ஊதா.
தனுசு இன்றைய ராசி பலன் (Dhanushu Today Rasi Palan):
உறவினர்கள் தொடர்பாக புரிதல் ஏற்படும். சுபகாரியத்தில் எடுக்கப்படும் முயற்சிகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையோடு புதிய முடிவுகளை எடுக்க வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உயரதிகாரிகள் ஆதரவாக செயல்படலாம். மகிழ்ச்சி நிறைந்த நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் வெளிர்ந்த மஞ்சள்.
மகரம் இன்றைய ராசி பலன் (Makaram Today Rasi Palan):
வியாபாரத்தில் மறைமுக ஆதரவு கிடைக்கும். தோழர்களின் வழியில் விரயம் உண்டாகும். புதிய முயற்சியை சிந்தித்து செயல்படுத்தலாம். உபரி வருமானம் என்பது மேஒங்கும். பொன், பொருள் சிந்தனை ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மூலமாக அலைச்சல் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் ஆதாயத்தை தரும். கீர்த்தி நிறைந்த நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் சந்தனம். Aval Payasam Recipe: அட்டகாசமான சுவையில் அவல் பாயசம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
கும்பம் இன்றைய ராசி பலன் (Kumbham Today Rasi Palan):
அதிக கோபம், முன்கோபத்தை குறைப்பது நல்லது. உறவுகளிடம் அனுசரணை அவசியம். பயணத்தால் புதிய அனுபவம் கிடைக்கும். வர்த்தகத்தில் கவனம் தேவை. உடன் பணியாற்றும் சக ஊழியரிடம் விவேகம் தேவை. தவறிய வாய்ப்புகள் குறித்த சிந்தனை ஏற்படும். சோதனை மறையும் நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் அடர் நீலம்.
மீனம் இன்றைய ராசி பலன் (Meenam Today Rasi Palan):
கடன் விஷயத்தில் விவேகம் அவசியம். ஆடம்பர செலவு காரணமாக சேமிப்பு குறையும். உடல் நலத்தில் மாற்றம் இங்கும். பலதரப்பட்ட சிந்தனை மனதை குழப்பும். பணியிடத்தில் உள்ள சூழலை புரிந்து செயல்பட வேண்டும். சிந்தனையில் மாற்றம் இருக்கும். வியாபார அலைச்சல் ஏற்படும். வளம் நிறைந்த நாளாக இன்று அமைகிறது. அதிஷ்ட நிறம் சந்தனம்.