Respective: Loss of Sleep Stress

டிசம்பர், 9: வயதான காலங்களில் பெரும்பாலானோருக்கு தூக்கமின்மை (Sleepiness) பிரச்சனை முதலில் ஏற்படும். 60 வயதை கடந்த பலருக்கும் உறக்கம் என்பது பெரும்பாலும் எட்டாக்கனியே. இவ்வயதில் 5 மணிநேரம் உறங்கினால் போதுமானது என்றாலும், அந்த 5 மணிநேரமும் பெரும் சிரமத்துடன் தான் உறக்கம் ஏற்படும். சிலர் மட்டுமே நல்ல உறக்கத்தை பெறுகிறார்கள்.

அனைத்து வயதினருக்கும் உறக்கம் என்பது மிக முக்கியமானது ஆகும். உடலுக்கு நாம் ஓய்வு கொடுத்தால் தான், உடல் புத்துணர்ச்சியுடன் மீண்டும் செயல்படும். நாம் உறங்கும் நேரத்தில் உடல் சுயமாக தன்னை புதுப்பிக்கும். ஒருவரின் உடல் உழைப்பு, உறங்கும் விதம், உடல் நலம், மனநலம், சுற்றுசூழல் போன்றவற்றை ஒருங்கே பெற்று உறக்கம் அமைகிறது. Budget Laptop: பட்ஜெட் விலையில் லேப்டாப் வாங்க நினைக்கிறீகளா?.. மாணவர்களுக்கான அசத்தல் லேப்டாப் லிஸ்ட் இதோ..! 

முதுமையில் உடல்நிலை காரணமாக உறக்கம் சரிவர ஏற்படுவது இல்லை. உறக்கமின்மையால் உள்ளத்தின் நலனும் பாதிக்கப்படுகிறது. இளவயதில் சரியாக உறங்காதவர்களுக்கு 40 வயதிலேயே ஞாபக மறதியானது ஏற்படும். தேவையில்லாத கோபம் ஏற்படும். தனிநபரின் உறக்கம் கெடும்போது பசியும் குறைகிறது. அஜீரண பிரச்சனை தலைதூக்குகிறது.

Women Sleeping

அதனைப்போல அவரது உணவின் அளவு குறைந்து, உடல் எடையும் கணிசமாக குறைகிறது. அவரது பணியில் ஆர்வம் குறைத்து, தலைவலி பிரச்சனை மேலோங்கும். மாதக்கணக்கில் நல்ல உறக்கம் இல்லாத பட்சத்தில், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.

கடந்த நூற்றாண்டில் தனிநபர் சராசரியாக 8 மணிநேரம் உறங்கி வந்த நிலையில், தற்போது அது 6 மணிநேரமாக குறைந்துள்ளது. வேலை நேரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தாலும் தொலைக்காட்சி, செல்போன் என பலரும் தனித்தனியே நேரம் செலவிட்டு உறக்கத்தை இழக்கின்றனர். இன்னும் சிலர் தூக்க மாத்திரைக்கும் அடிமையாக தொடங்குகின்றனர். இதனால் பக்கவிளைவு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 9,2022 06:15 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).