Black Nightshade (Photo Credit: Amazon.com)

ஏப்ரல் 01, சென்னை (Health Tips): உடல் ஆரோக்கியத்திற்கு நாம் பல்வேறு வகையான கீரை வகைகளை சாப்பிட்டு வருகிறோம். அதில், மணத்தக்காளி கீரை குளிர்ச்சி தன்மைகொண்டதாகவும், இது வறண்ட நிலப்பகுதிகளில் அதிகம் விளையக்கூடியாது ஆகும். மேலும், மணத்தக்காளி கீரையின் இலை, காய், கனி, தண்டு, வேர் என அனைத்தும் (Medicinal Properties Of Spinach) மருத்துவப் பயன்மிக்கதாகும். அனைத்து பாகங்களும் உண்பதற்கு ஏற்றவைதான். இருப்பினும், சிறிது கசப்புத்தன்மை இருக்கும். இக்கீரையில், அதிகளவு புரதம், மாவுச்சத்து, தாது உப்புகள் நிறைந்து காணப்படுகிறது. The Four Youths Committed Robbery: வழிப்பறி செய்த நான்கு வாலிபர்கள் – மடக்கி பிடித்த காவல்துறையினர்..!

மருத்துவ குணங்கள்:

வயிற்றுப்புண்: மணத்தக்காளி கீரையின் சாறை, அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பருகினால் வயிற்றுப்புண் சீக்கிரம் குணமடையும். தொடர்ச்சியாக பத்து நாட்கள் வரை இவ்வாறு பருகிவந்தால் நல்ல பயனளிக்கும்.

வாய்ப்புண்: மணத்தக்காளி கீரை சாறை வாயிலிட்டு, சிறிதுநேரம் தொண்டையில் வைத்து கொப்புளித்து துப்பினால் வாய்ப்புண் குணமாவதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும்.

இதய பலவீனம்: மணத்தக்காளி கீரையுடன் இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் கலந்து வாரத்திற்கு மூன்று முறை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலவீனமானவர்களுக்கு நல்ல பலன் அளிக்கும். அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகி, முகம் பொலிவு பெறும். சிறந்த மருத்துவ குணமிக்க மணத்தக்காளி கீரையை நாம் அடிக்கடி சாப்பிடுவதால் நம் உடல் நலம் பெறும்.