Respective: Mud Sores

டிசம்பர், 11: வடகிழக்கு பருவமழை (North East Monsoon) தமிழகத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் (Tamilnadu) உள்ள பல மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு இருக்கிறது. இந்த காலங்களில் சேற்றுப்புண்கள் (Mud Sores) என்பது இயல்பானது. சாலையில் தேங்கியிருக்கும் சேறு, சகதி, கழிவுநீர் கலந்து வரும் மழைநீர், சேற்றில் நின்று பணியாற்றுவோர் என பலருக்கும் சேற்றுப்புண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

முதலில் சாதரணமாக ஏற்படும் சேற்றுப்புண் படிப்படியாக அதிகமாகி கால்களை கடுமையாக பாதிக்கும். காலணிகள் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டு நடக்க இயலாத சூழ்நிலை உருவாகும். சேறுகளில் இருக்கும் நுண் கிருமிகளால் ஏற்படும் தாக்கம் கால்களை பாதித்து சேற்றுப்புண்களை ஏற்படுத்துகிறது.

சேறு, சகதி, மண்ணில் இருக்கும் பாக்டீரியா கால்களின் விரல் இடுக்குகளில் தங்கி வியர்வையில் வளரும். கால்களை நாம் சரியாக சுத்தம் செய்யாத பட்சத்தில் சேற்றுப்புண் ஏற்படும். இவை பாதம், விரலுக்கு நடுவில் பெரும்பாலும் ஏற்படும். இன்று சேற்றுபுண்களில் இருந்து கால்களை பராமரித்து பாதுகாப்பது எப்படி என காணலாம். Tamilnadu on December Month: டிசம்பர் மாதமும், தமிழ்நாட்டின் போதாத காலமும்… மக்களை கலங்கவைக்கும் மாதம்., காரணம் என்ன?..! 

சேற்றுப்புண் ஏற்படாமல் தடுக்க வழிமுறைகள்:

சேற்றுப்புண்களை தவிர்க்க ஈரமான இடங்களில் வேலை செய்து கால்களை மென்மையான துணி கொண்டு துடைக்க வேண்டும். கால்களின் விரல்களையும், இடுக்குகளையும் நன்றாக துடைக்க வேண்டும். கால்களை இயன்றளவு ஈரப்பதம் கொண்டவாறு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பாக்டீரியா தொற்றுகள் வளர்வதை தடுக்க வெந்நீரில் உப்பு, எலுமிச்சை சாறு கலந்து கால்களை கழுவ வேண்டும். கையளவு வேப்பிலை எடுத்து அரைத்து அந்நீரை கொதிக்க வைத்தும் பாதங்களை கழுவலாம். குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெயோடு மஞ்சள் சேர்த்து காலில் தடவி குளிக்க சேற்றுப்புண் ஏற்படாது.

பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டியது:

நாம் மேலே குறிப்பிட்டுள்ளவாறு உள்ள முறைகளை கடைபிடித்து கால்களை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர், வேப்பிள்ளையோடு மஞ்சள் சேர்த்து அரைத்து கால்களில் பூசலாம். அதனைப்போல, அருகம்புல்லுடன் மஞ்சளை அரைத்தும் பூசலாம். இதனால் சேற்றுப்புண்கள் குணமாகும்.

மருதாணி இலை, அம்மான் பச்சரிசி இல்லை போன்றவற்றையும் மஞ்சளோடு சேர்த்து அரைத்து பூசலாம். குழந்தைகள் சேற்றுப்புண்ணால் பாதிக்கப்பட்டு இருந்தால் வெண்ணெய் தடவலாம். இதனால் எரிச்சல் குறையும். சர்க்கரை நோயாளிகள் முடிந்தளவு சேற்றுப்புண் ஏற்படாமல் உடலை பாதுகாக்க வேண்டும். அவ்வாறு ஏற்பட்டால் மருத்துவரை நாடுவது நல்லது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 03:36 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).