Virat Kohli Anger Moment Captured Visual (Photo Credit: Twitter)

அக்டோபர் 11, மும்பை (Sports News): ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023ல், இன்று 09வது ஆட்டம் அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன.

இன்றைய ஆட்டம் இந்தியாவுக்கு இரண்டாவது ஆட்டம் ஆகும். சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில், இந்தியா வெற்றி அடைந்தது. இன்றைய போட்டியிலும் அதேபோல இந்தியா வெற்றி அடைந்துள்ளது.

முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியினர் பேட்டிங் தேர்வு செய்த நிலையில், ஆட்டத்தின் இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்கள் எடுத்தனர். 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. Odisha Shocker: கணவரை கொலை செய்து, 3 நாட்கள் சடலத்துடன் வாழ்ந்த மனைவி: துர்நாற்றத்தில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.! 

ஆப்கானிஸ்தான் சார்பில் விளையாடிய வீரர்களில் ரஹ்மானுல்லா 28 பந்துகளில் 21 ரன்னும், இப்ராஹிம் 28 பந்துகளில் 22 ரன்னும், ஷா 22 பந்துகளில் 16 ரன்னும், ஹஸ்மதுல்லா 88 ரன்கள் பந்துகளில் 80 ரன்னும், ஓமர்ஸி 69 பந்துகளில் 62 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

Rohit Sharma (Photo Credit: Twitter)

மறுமுனையில் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்னும், இஷான் கிஷான் 47 பந்துகளில் 47 ரன்னும், விராட் கோஹ்லி 56 பந்துகளில் 55 ரன்னும், ஷ்ரேயாஸ் ஐயர் 23 பந்துகளில் 25 ரன்னும் அடித்தனர். ரோஹித் மற்றும் இஷான் ஆகியோர் அவுட்டாகினர். விராட் - ஷ்ரேயாஸ் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.

இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. இந்த வெற்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. விளையாட்டின் நடுவே, இந்தியா பீல்டிங் செய்யும்போது, ஆப்கான் அணியை சேர்ந்த நவீன் உல் களத்தில் இருந்தார். Boiler Explosion in Milk Company: திருச்சி மணப்பாறை அருகே பால் நிறுவனத்தில் பாய்லர் வெடிப்பு.! பல கோடி ரூபாய் நஷ்டம்.!

அவர் பந்தை எதிர்கொண்டு இறுதிக்கட்டத்தில் ரன்களை குவிக்க முயற்சித்தபோது, விராட் கோலி பந்தை பிடித்து விக்கெட் கீப்பரான கே.எல் ராகுலிடம் வழங்கினார். அப்போது, நவீனை அவுட்டாக்க முயற்சித்த ராகுல், தோல்வியுற்றார். இதனால் ஒருகணம் கோலியின் முகம் கொந்தளித்தது.

இதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் சார்பில் ரோஹித் ஷர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ், ஷர்துல்க் கில், ஷர்துல்க் கில் ஆகியோர் விளையாடி இருந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் நவூல் அஹ்மத், ரகுல் அஹ்மத், ரஹ்குல் அஹ்மத் ஆகியோர் விளையாடி இருந்தனர்.