
மார்ச் 14, புதுடெல்லி (New Delhi): தீமையை விரட்டி நன்மைகளை தரும் வண்ணங்களின் திருவிழா, வசந்தகாலத்தினை வரவேற்கும் ஹோலி பண்டிகை, இன்று இந்தியாவில் பெருவாரியாக சிறப்பிக்கப்படுகிறது. ஹோலிகா என்ற அரக்கியை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வதம்செய்த நாளாகவும் இன்று ஹோலி பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை களைகட்டி இருக்கிறது. இந்த நாளில் ஒவ்வொருவரும் தங்களின் உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் மீது வர்ணங்களை பூசி கொண்டாட்டங்களை மேற்கொள்வார்கள். Lemon Benefits: தினமும் எலுமிச்சை உட்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன..?

களைகட்டிய கொண்டாட்டம்:
தலைநகர் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை நாளில், சென்னையில் உள்ள சௌகார்பேட்டை பகுதியிலும் பண்டிகை கொண்டாட்டம் உச்சம் பெறும். இந்நிலையில், ராஜஸ்தான், மேற்குவங்கம் பகுதியில் வசித்து வரும் மக்கள், ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். இதன் காட்சிகள் உங்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் ஹோலி கொண்டாட்டம்:
#WATCH | Kolkata, West Bengal: Women apply gulaal and celebrate the festival of colours, Holi pic.twitter.com/9U4w9mZavi
— ANI (@ANI) March 14, 2025