Couple Bed Enjoy (Photo Credit: Pixabay)

மே 27, சென்னை (Couple Tips in Tamil): தாம்பத்திய விஷயங்களில் ஆண்களிடையே ஏற்பட்டு வந்த குறைபாடு சார்ந்த பிரச்சனைகள் தற்போது பெண்களுக்கும் ஏற்பட தொடங்கியுள்ளது. இதனால் பெண்கள் தாம்பத்தியத்தில் ஆர்வமின்மையை எதிர்கொள்கின்றனர். மருத்துவத்தில் தம்பதிகள் இடையே தாம்பத்திய ஆர்வம் இல்லாதது பிரிஜிடிட்டி என்று அழைக்கப்படுகிறது. இது மூளை-பெண்ணுறுப்பு இடையேயான தொடர்பில் சந்திக்கும் தடையால் உண்டாகிறது. ஈஸ்டிரோஜன் அளவு குறைவது, பாலியல் ஆசை குறைவது, இனப்பெருக்க உறுப்புகளில் இரத்த ஓட்டம் பாதிப்பு, பிறப்புறுப்பில் வழவழப்பு திரவம் சுரப்பது குறைதல் போன்றவை பெண்ணுக்கு பாலியல் ஆசையை தவிர்க்க காரணமாக அமைகிறது. அதேபோல, பிரசவத்துக்கு பின்னர் தாய்ப்பால் கொடுக்கும்போது பெண்ணின் உடலில் ஹார்மோன் அளவு மாறுபடுவது தாம்பத்திய விருப்பத்தை பாதிக்கிறது. வலியுடன் கொண்ட தாம்பத்தியம், சிறுநீர்ப்பை பிரச்சனை, மனசோர்வு, இதய நோய், மனஅழுத்தம் போன்றவையும் தாம்பத்திய வெறுப்பை ஏற்படுத்துகிறது. AI: அப்டேட் செய்ய முயன்ற டெவலப்பருக்கு மிரட்டல்.. பிளாக்மெயில் செய்த AI.! 

தம்பதிகள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

எப்போதும் நீங்கள் உங்களின் வாழ்க்கைத்துணையுடன் வெளிப்படையாக பேசுங்கள். ஏனெனில் திருமணத்துக்கு பின்னர் நீங்கள், உங்களின் வாழ்க்கையில் நுழைந்துவிடுவதால், நீங்களே அனைத்துக்கும் பொறுப்பு. அதனை இருவரும் உணர வேண்டும். மனஅழுத்தத்தை குறைத்து தம்பதியா உறவில் கவனம் செலுத்த வேண்டும். தாம்பத்தியத்தை மேம்படுத்த நீச்சல் பயிற்சி, சைக்கிளிங் பயிற்சி செய்யலாம். இது இனப்பெருக்க உறுப்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவி செய்யும். தாம்பத்தியத்தில் யோனி வறட்சியால் வலியை எதிர்கொண்டால் தேங்காய் எண்ணெய், சோற்றுக்கற்றாழை ஜெல், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தலாம். உணவில் முந்திரி, பாதாம், அவகேடா, டார்க் சாக்லேட், மாம்பழம், பலாப்பழம், மாதுளைப்பழம், பேரீட்சை பழம், அத்திப்பழம், செவ்வாழைப் பழம், எள்ளு மிட்டாய், வெந்தயக்களி, முட்டை, கடல் உணவுகள், பால் பொருட்கள், முருங்கைக்காய், முருங்கைக்கீரை, புடலங்காய், சின்ன வெங்காயம், பூண்டு, பசலைக்கீரை போன்றவற்றை சேர்ப்பது நல்ல பலனை தரும்.