Template: Pregnant Women

டிசம்பர், 9: கர்ப்பமான காலத்தில் (Pregnancy) பெண்கள் உணர்திறன் கொண்ட சருமத்தினை பெற்றிருப்பார்கள். இதனால் தழும்புகள், அரிப்புகள், பருக்கள், தோல் பிரச்சனை போன்று பலவற்றை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பருக்கள் பிரச்சனை அவர்களை எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது. சில பெண்களுக்கு தடிப்புகள் மிகுந்து பருக்கள் ஏற்படுகின்றன.

ஈஸ்டிரோஜன் & புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பு (Harmon) சருமத்தின் உற்பத்தியை அதிகரித்து, சரும துளைகளை நிறுத்தி வைக்கிறது. இந்த சமயத்தில் வாயை சுற்றிலும், கன்னத்திலும் பருக்கள் ஏற்படலாம். கர்ப்பகால பருக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில், அது பிரசவத்திற்கு பின்னும் நீடிக்க வாய்ப்புள்ளது. இவற்றுக்கான சிகிச்சைகளை மருத்துவரிடம் ஆலோசித்து மேற்கொள்ள வேண்டும்.

கர்ப்பமான (Pregnant) சமயங்களில் ஏற்படும் கடுமையான தோல் பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது மெலஸ்மா. இது கர்ப்பகால முகமூடி என்று அழைக்கப்படும். இது முகத்தில் ஏற்படும் நிறமி ஆகும். இவை புறஊதா கதிரிகளின் வெளிப்பாடு, பரம்பரை, ஈஸ்டிரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோனல் ஏற்படுகிறது. World Deadliest Wars: அதிக இறப்பு, பேரழிவுகளை கொண்ட உலகளவிலான போர்களில் முக்கியமான 5 எவை?.. தெரிஞ்சிக்கோங்க., ஆச்சரியப்பட்டு போவீங்க.! 

Pregnant-Lady
Pregnant Lady

கர்ப்பத்தின் போது ஏற்படும் தசைகள் நீட்சியால் உடல் முழுவதிலும் பெண்களுக்கு அரிப்பு ஏற்படுகிறது. அரிப்பு தொடர்ந்து அதிகரித்தால் மருத்துவரை நாடி ஆலோசனை பெற்று அதற்கான மருந்துகளை உபயோகம் செய்யலாம். இக்காலத்தில் கல்லீரல் தொடர்பான தொந்தரவும் ஏற்படும்.

அதனைப்போல சருமத்தின் மேற்பரப்பில் குழந்தையின் வளர்ச்சியோடு வயிற்று தோல் நீட்டிப்பு செய்யப்படுவதால் தழும்புகளும் ஏற்படும். அதிகளவு உடல் எடை கொண்ட பெண்கள் சருமத்தில் தழும்புகள் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்ப காலங்களில் 20 கிலோ எடைக்கு மேல் பெண்களின் எடை கூடினால் தழும்புகள் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் ஆதிக்கம்.

Note: கர்ப்பிணி பெண்கள் எவ்வித மருந்துகளையும் சுயமாக எடுக்க வேண்டாம்; மருத்துவரின் ஆலோசனையை பெற்று செயல்படுவது நல்லது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 9,2022 08:59 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).