Skipping Breakfast Increases Health Risk |Indian Break Fast Idly, Dosa, Vada (Photo Credit: Youtube)

செப்டம்பர் 15, சென்னை (Health Tips): நாம் தினமும் காலை நேரத்தில் சாப்பிடும் உணவு அன்றைய நாளுக்கு தேவையான ஊட்டச்சத்தினை வழங்குகிறது. நாள் முழுவதும் உடலுக்கு தேவைப்படும் ஆற்றலை வழங்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் காலை உணவு பிரதானமாக உதவி செய்கிறது. காலை நேரத்தில் உணவை தொடர்ந்து தவிர்த்து வருவது ரத்த சர்க்கரை அளவில் மாற்றத்தை உண்டாக்கும். இதனால் இரண்டாம் கட்ட சர்க்கரை நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். Health Warning: அலாரம் வைத்து உறங்குறீங்களா? மருத்துவ நிபுணர்களின் ஷாக் எச்சரிக்கை.!

காலை உணவை தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் :

இன்சுலின் உணர்திறன், குளுக்கோஸ் செயல்திறன் போன்றவை பாதிக்கப்பட்டு காலப்போக்கில் நீரிழிவு நோய்க்கு இது வழிவகை செய்யும். காலை நேரத்தில் உணவை ஏதோ ஒரு காரணத்தால் தவிர்த்து விட்டு பின் மதிய நேரத்தில் உணவை அதிகமாக சாப்பிடுவது போன்றவை ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தும். இதனால் உடல் எடை அதிகரிக்கும். தொடர்ச்சியாக காலை உணவை தவிர்த்து வந்தால் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களும் ஏற்படும்.

அல்சர் பிரச்சனை :

தினமும் காலை எழுந்ததும் குறைந்தது ஒரு மணி நேரத்திற்குள் உணவு எடுத்துக் கொள்வது நல்லது. நாம் சாப்பிடும் உணவில் புரதம், நார்ச்சத்து போன்றவை இடம்பெற்று இருப்பதையும் உறுதி செய்யுங்கள். காலை உணவை தவிர்க்கும் பொருட்டு வயிறு பகுதியில் எரிச்சல் உணர்வு உண்டாகும். இதற்கான காரணம் முதலில் குறைவாக இருந்தாலும் பின் நாட்களில் அல்சர் போன்ற மிகப்பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தும்.