ஜனவரி 12, சென்னை (Chennai News): உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கதிரவனுக்கும், பசுவுக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு கொண்டாடப்படும் தைப்பொங்கல், "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்ற வார்த்தைக்கேற்ப, பழைய கசப்பான எண்ணங்களை தீயில் இட்டு கொளுத்தி, பொங்கலுக்கு கதிரவனுக்கு நன்றி தெரிவித்து புதிய பயணத்திற்கான அச்சாரமிடுவது முக்கியத்துவம் பெறுகிறது. Pongal 2025: தித்திக்கும் தைப்பொங்கல், களைகட்டும் மாட்டுப்பொங்கல், பாசத்துடன் காணும் பொங்கல்... வாழ்த்துச் செய்தி இதோ..!
பொங்கல் வாழ்த்துக்கள்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஊரிலும் பொங்கல் விளையாட்டுகளும் களைகட்டும். மாட்டுப்பொங்கல் அன்று ஆடலும்-பாடலும் நிகழ்ச்சி கொண்டாட்டத்துடன் நடைபெறும். இன்று பொங்கல் கொண்டாட்டத்துடன், வாழ்த்துக்களையும் நாம் பகிர்ந்து மகிழ்வோம். இத்துடன் லேட்டஸ்டலி தைப்பொங்கல் வாழ்த்துச்செய்திகளையும் இணைகிறது. உங்களுக்கு விருப்பமான பதிவுகளை பதிவிறக்கம் செய்து வாட்சப், முகநூல் ஸ்டேட்ஸில் வைத்து மகிழுங்கள். Bhogi Festival 2025: போகி பண்டிகை 2025: நல்ல நேரம், வாழ்த்து செய்தி, வரலாறு இதோ.!
தைப்பொங்கல் வாழ்த்து 2025 (Thai Pongal Wishes Tamil 2025):
1. மங்களம் பொங்கட்டும்… மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும்… எண்ணியது ஈடேற… தமிழர் திருநாள்… தைப் பொங்கல் வாழ்த்துகள்…
2. அன்பும் ஆனந்தமும் பொங்கிட… அறமும் வளமும் தளைத்திட… இல்லமும் உள்ளமும் பொங்க…இனிய தமிழர் திருநாளாம்… பொங்கல் நல்வாழ்த்துகள்!
3. உழவனுக்கு ஒரு திருநாளாம்.. உலகம் போற்றும் நன்னாளாம்... சூரியனை வணங்கி விட்டு... சுருக்குப் பையில் காசு எடுத்து தித்திருக்கும் கரும்பு வாங்கி தெவிட்ட தின்னும் திருநாளாம்… அனைவருக்கும் தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்!
4. காசுக்கு கரும்பு வாங்கி... அதை கால் பாகமாக உடைத்து... கடவாய் பல்லில் கடித்து... தித்திப்போடு கொண்டாடுவோம்... இந்த பொங்கல் திருநாளை... இனிய பொங்கல் வாழ்த்துகள்!
5. உறவுகளின் வீட்டில் புன்னகை பொங்க… இனம் புரியா இன்பம் மனதில் பொங்க… நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க… பொங்கட்டும் தைப் பொங்கல்!
மாட்டுப் பொங்கல் வாழ்த்து 2025 (Mattu Pongal Wishes Tamil 2025):
1. உழவனுக்கு மட்டும் அல்ல, ஜல்லிக்கட்டு நிகழ்விற்கு பிறகு உலகுக்கே நீ செல்லப்பிள்ளை தான்.. மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்!
2. கலைப்பறியாது உழைக்கும் உனக்கு தலை வணங்கி நன்றி கூறுகிறேன் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்!
3. உழவனின் நண்பனுக்கு நன்றி சொல்லும் நாள்., இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்!
4. இது உழவர்களின் தோழனை கொண்டாடும் திருநாள் அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
காணும் பொங்கல் வாழ்த்து 2025 (Kaanum Pongal Wishes Tamil 2025):
1. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சந்தித்து மகிழ்திட இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்!
2. நண்பர்களை நேசிக்கவும் உறவுகளை போற்றவும் பெரியோரை வணங்கவும் தமிழர்கள் உருவாக்கிய தனிப்பெரும் பண்டிகை காணும் பொங்கல்!
3. பண்டிகை காலங்களில் உறவுகளை காண வேண்டும் என்பதற்காக கொண்டாடப்படுகிறது இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்!
4. காண வேண்டும் காணும் பொங்கல் சொந்தங்களை தேடி நீங்கள் களிப்புடன் இன்று காண்போம் காணும் பொங்கல் கொண்டாடுவோம் இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்!
லேட்டஸ்ட்லி தமிழ் தனது இனிய பொங்கல் 2025 வாழ்த்துக்களை பதிவு செய்கிறது.