நவம்பர் 15, சென்னை (Chennai): தமிழகத்தில் கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள் முருகன், ஐயப்பன் சுவாமிகளுக்கான காலமாக தொன்றுதொட்டு இருந்து வருகிறது. பழனி, திருச்செந்தூர், சபரிமலை ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் மாலையிட்டு, விரதம் இருந்து ஸ்வாமிகளை தரிசனம் செய்ய தயாராகி வருகிறார்கள்.
தற்போது சபரிமலைக்கான சீசன் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உட்பட தொலைதூர நகரங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை சென்று வருவது வழக்கம். 48 நாட்கள் என ஒருமண்டலம் விரதம் இருந்து, மாலை அணிவித்து வழிபாடுகள் தொடரும்.
இந்நிலையில், பக்தர்கள் சென்னை, திருச்சி உட்பட பல நகரங்களில் இருந்து பம்பா செல்ல தொடங்கிவிட்டனர். பலரும் அரசு பொதுப்போக்குவரத்தை பயன்படுத்திவரும் நிலையில், அரசு விரைவுபோக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. College Student Arrested Pocso Act: தோழன் என நம்பியதற்கு துரோகியாக மாறிய கல்லூரி மாணவன்; நிச்சியக்கப்பட்ட மாப்பிளைக்கு ஆபாச போட்டோ.. போக்ஸோவில் கைது.!
அதன்படி, நவம்பர் 16, 2023 முதல் ஜனவரி 16ம் தேதி வரை சபரிமலை செல்வதற்கு சென்னை, திருச்சி, மதுரை, கடலூர், புதுச்சேரி ஆகிய நகரங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அல்ட்ரா டீலக்ஸ், குளிர்பதன வசதி இல்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதிகொண்ட பேருந்துகளும் சிறப்பு பேரூந்துகளாக இயக்கப்படுகிறது.
இப்பேருந்துகளில் பயணிக்க விரும்பும் பக்தர்கள் மற்றும் பயணிகள், www.tnstc.com என்ற இணையத்திற்கு சென்று பேருந்துகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். குழுவாக சபரிமலை பயணிக்க விரும்பும் பக்தர்களின் வசதியையும் கருத்தில் கொண்டு சுற்றுலா பேருந்து சேவையும் வழங்கப்படுகிறது.
இதற்கு சம்பந்தப்பட்ட ஐயப்ப பக்தர்கள் குழு, 30 நாட்களுக்கு முன்னதாக பேருந்தை முன்பதிவு செய்து பம்பை சென்று வரலாம். இதனையும் tnstc.com பக்கத்தில் முன்பதிவு செய்யும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனைதவிர்த்து தமிழ்நாடு - கேரளா எல்லை மாவட்டங்களான குமரி, தென்காசி, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
கேரளா மாநில அரசின் பேருந்துகளும் மேற்கூறிய மாவட்டங்களில் இருந்து தங்களின் பேருந்துகளை இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.