Varalakshmi Vratam 2024 (Photo Credit: Team LatestLY)

ஆகஸ்ட் 12, சென்னை (Chennai): Varalakshmi Vratam Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Varalakshmi Vratam 2024: பயபக்தியுடன் வேண்டினால் நாம் கேட்கும் வரங்களை குவிக்கும் அன்னை வரலட்சுமி தேவி (Varalakshmi), தன்னை வணங்குவோருக்கு நன்மையை அருள்பவர். வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம், செல்வம், தைரியம், வெற்றி, கல்வி, பதவி, குழந்தைப்பேறு என அனைத்து விதமான நன்மையையும் கிடைக்கும். ஆண்களுக்கும் பதவி உயர்வு உட்பட பல வரங்கள் வந்துசேரும். Varalakshmi Vratam 2024: தீர்க்க சுமங்கலியாக, இழந்த பதவியை வழங்கும் வரலட்சுமி விரதம்; புராணம் சொல்வது என்ன?.. தெரிஞ்சிக்கோங்க ஆன்மீக நண்பர்களே.!

சாபத்தையும் நீக்கும் வரலட்சுமி விரதம்:

மகத நாட்டில் சாருமதி என்ற பெண்மணி, தனது கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை இறைவனாக எண்ணி பணிவிடை செய்து வந்துள்ளார். அவரின் மனசாட்சி மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை வழங்கவே, இரவில் சாருமதியின் கனவில் தோன்றி தன்னைத் துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்வோரின் இல்லத்தில் நான் இருப்பேன் என்று கூறி, விரதத்திற்கான வழிமுறையையும் எடுத்துரைத்தார். அதன்படி, சாருமதியும் வரலட்சுமி விரதம் இருந்து பலனை பெற்றார் என்பது முன்னோர் வாக்கு. இறைவனால் பெறப்பட்ட சாபத்தையும் நீக்கி, நற்பலன் வழங்கும் தன்மை கொண்ட வரலட்சுமி விரதத்தை நாம் மேற்கொண்டால் பதவி கைகூடும், செல்வ செழிப்புடன் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும், குழந்தைப்பேறு பாக்கியம் உண்டாகும், திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. Varalakshmi Vratham 2024: மாங்கல்ய பலம் அதிகரிக்க, வெற்றி கிடைக்க வரலட்சுமி விரதம்; வாழ்த்து செய்தி, நல்ல நேரம் குறித்த விபரங்கள் இதோ.! 

வரலட்சுமி நோன்பு 2024:

இன்று வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் ஒவ்வொருவரும் புண்ணிய நதியில் நீராடி, தாமரை மலர்கள் கொண்டு, மஞ்சள் நிறத்தினாலான புத்தாடை உடுத்தி வரலட்சுமி அம்மனை விரதமிருந்து வழிபடுவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை பெற உதவி செய்யும். வீட்டில் விரதம் இருப்போர் அம்மனுக்கு பிடித்த சோறு, பருப்பு வடை, பாயசம், கொழுக்கட்டை, பழங்கள் போன்றவற்றை வைத்து படைக்கலாம்.வைகுந்த பாக்யத்தை அருளும் வரலட்சுமி விரதத்தை கடைபிடித்து, நலம்பெறலாம். 2024ம் ஆண்டுக்கான வரலட்சுமி விரதம் என்பது 16 ஆகஸ்ட் 2024 இன்று சிறப்பிக்கப்படுகிறது. அன்றைய நாளில் விரதம் இருந்து பூஜை செய்து வழிபாடு நடத்த நல்ல நேரமாக காலை 12:15 மணிமுதல் 01:15 மணிவரை கணிக்கப்பட்டுள்ளது. மாலை 04:45 மணிமுதல் 05:45 மணிவரை கணிக்கப்பட்டுள்ளது.