மே 18, குற்றாலம் (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடந்த சில நாட்களாகவே தொடர் கனமழை பெய்தது. தென்மாவட்டத்தில் இருக்கும் விருதுநகர், நெல்லை, குமரி, மதுரை ஆகிய மாவட்டத்திலும் பல இடங்களில் திடீர் கனமழை பெய்தது. கோடையின் அக்னி நட்சத்திரத்தின் தொடக்கத்தின் பின் பெய்யும் மழை என்பதால், பல இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்குகிறது.
அலைமோதிய சுற்றுலாப்பயணிகள் கூட்டம்: அப்படியாக, கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தின் மேற்குதொடர்ச்சிமலைப்பகுதியில் பெய்த மழையால், குற்றாலம் மெயின் அருவி, குற்றாலம் (Courtallam Floods) பழைய அருவி, குற்றாலம் ஐந்தருவி ஆகிய நீர்நிலைகளில் நீர் வரத்து இருந்தது. வெள்ளிக்கிழமையான நேற்று, பல ஊர்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மேற்கூறிய அருவிகளில் நீராடி மகிழ்ந்தனர். நண்பகல் வேலைக்கு பின்னர் திடீரென வெள்ள நீர் அருவிகளில் ஆட்பறித்துக்கொட்டி, பழைய குற்றாலத்தில் காற்றாற்று வெள்ளத்தை ஏற்படுத்தியது. Girl Lodged a Complaint Against Boyfriend: 4 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதல்.. ஜாதியை காரணம் காட்டும் இளைஞனின் பெற்றோர்.. காதலி குமுறல்.!
17 வயது சிறுவன் உயிரிழப்பு: குற்றாலத்தில் (Courtallam Waterfalls) மெயின் மற்றும் ஐந்தருவிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால், லேசான நீர் வரத்து தென்பட்டதும் பயணிகள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். ஆனால், ஐந்தருவியில் அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்குள் வெள்ள நீர் சுற்றுலாப்பயணிகளை சூழ்ந்துகொண்டது. இதனால் 17 வயது சிறுவன் அஸ்வின் என்பவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரால் மீட்கப்பட்டது.
மீட்பு பணியில் உள்ளூர் மக்கள்: அருவிக்கு அருகே இருந்த பாதுகாப்பு தடுப்புகளை பிடித்துக்கொண்டு மக்கள் உயிருக்காக பரிதவிக்க, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், துரிதமாக செயல்பட்டு அனைவரையும் பத்திரமாக மீட்டனர். அதிகாரிகள் வருவதற்குள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி அடித்து வரப்பட்ட மக்களில் ஒருசிலரை உள்ளூர் மக்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். அந்த வகையில், ஆட்டோ ஓட்டுநர் ஆதம் என்பவர் மீட்பு பணியி ஈடுபட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. Courtallam Waterfalls Flood: பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; 17 வயது சிறுவன் பலி..! காட்டாற்று வெள்ளத்தால் தெறித்தோடிய மக்கள்.!
தற்போதைய நிலையில் குற்றாலம் அருவிகளில் குளிக்க காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தற்காலிக தடையை விதித்து இருக்கின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர் ஆதம் மீட்பு பணியில் ஈடுபட்ட காட்சி:
பழைய குற்றாலம் வெள்ளப் பெருக்கில் மக்களை காப்பாற்றிய அன்பு நண்பர் தென்காசி மவுண்ட் ரோடு ஆதம் சீட்கவர் மற்றும் ஆட்டோ ஓட்டனர் !!@ChennaiRains @kaj29a @ChennaiRmc @kalyanasundarsv @MasRainman @praddy06 @ramanathan4548 pic.twitter.com/xhjezL1Yxd
— narayanan weather man (@narayananweath1) May 17, 2024
17 வயது சிறுவன் அஸ்வின் இழுத்து செல்லப்படுவதாக கூறும் அதிர்ச்சி காணொளி:
பழைய குற்றாலம் அருவி வெள்ளத்தில் சிக்கி பழியான அஸ்வின் வெள்ளத்தில் அடித்து செல்லும் காட்சி@ChennaiRains @kalyanasundarsv @kaj29a @praddy06 @MasRainman @ramanathan4548 pic.twitter.com/67k5ZJTY7C
— narayanan weather man (@narayananweath1) May 17, 2024
இன்ப குளியல் அருவி உயிர்பறித்தது ஏன்? குற்றாலம் அருவிகளை பொறுத்தமட்டில், அவைக்கு மலைமேல் பெய்யும் மழை காரணமாக நீர் வரத்து என்பது இருக்கும். மலைகளின் மீது பெய்யும் மழை அடிவாரத்தில் உள்ள யாருக்கும் தெரியாது. எங்கோ ஒரு மூலையில் பெய்யும் மழை, அருவிகளில் நீர்வரத்தை அதிகரிக்கும். இதனை கண்காணிக்க குற்றாலம் நீர்வரத்து பாதைகளில் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கேமிராக்கள் அமைத்து, மழைக்காலங்களில் மட்டுமாவது முழு அளவிலான கண்காணிப்புகளை ஏற்படுத்துவதே இவ்வாறான துயரங்களை பின்னாளில் குறைக்க வழிவகை செய்யும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. மலையின் மீது 2 மணிநேரம் மழைபெய்த பின், அந்நீர் தனது வழித்தடத்தில் அருவிகளுக்கு 2 - 3 மணிநேரம் பின் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.