ஏப்ரல் 02, பெங்களூரு (Cricket News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) கிரிக்கெட் தொடரில், நேற்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் (LSG Vs PBKS IPL 2025) அணிகள் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, இன்று (02 ஏப்ரல் 2025) பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - குஜராத் டைட்டன்ஸ் (Royal Challengers Bengaluru Vs Gujarat Titans IPL 2025) அணிகள் இன்று மோதுகிறது. இன்று இரவு 07:30 மணியவில் ஆட்டம் தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் செயலி (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) ஆகிய தொலைக்காட்சி சேனலில் நேரலையில் காணலாம். PBKS Vs LSG: ஐபிஎல் 2025: இன்று பஞ்சாப் - லக்னோ அணிகள் மோதல்.. ஆட்டம் எங்கு? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
ராயல் சேலஞ்சர்ஸ் எதிர் டைட்டன்ஸ் (RCB Vs GT IPL 2025):
2025 ஐபிஎல் தொடரில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB IPL 2025) அணி புள்ளிப்பட்டியலில் என்ஆர்ஆர் +2.266 புள்ளிகள், 4 பிடிஎஸ் புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. குஜராத் ஜெயிண்ட்ஸ் (GT IPL 2025) அணி புள்ளிப்பட்டியலில் என்ஆர்ஆர் +0.625 புள்ளிகள், 2 பிடிஎஸ் புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் இருக்கிறது. இரண்டு அணிகளும் தங்களின் அடுத்த வெற்றிக்காக போராடும் என்பதால், இன்றைய ஆட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.
ஈ சாலா கப் நம்தே (Royal Challengers Vs Titans IPL 2025):
அதேநேரத்தில், 17 சீசன்களாக ஒரு வெற்றிக்கோப்பையை கூட பெறாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இந்த போட்டியில் ஐபிஎல் டிராபியை வெற்றிபெற்று வாங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலியின் ஜெர்சி நம்பர் 18, ஐபிஎல் சீசன் 18 என ஏற்கனவே ரசிகர்கள் பல்வேறு வியூகங்களை கணித்து, ஆர்சிபி அணி நடப்பு தொடரில் மிகப்பெரிய வெற்றியை அடையும் என கூறி வருகின்றனர். அதனை உறுதி செய்யும் வகையில், சென்னை அணியை (CSK VS RCB IPL 2025) 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.