Myanmar Earthquake Damage (Photo Credit: @TostevinM X)

மார்ச் 30, பேங்காக் (World News): மியான்மர் நாட்டை மையமாக வைத்து, கடந்த வெள்ளிக்கிழமை மதிய நேரத்தில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மியான்மார் மட்டுமல்லாது, அதன் அண்டை நாடுகளான தாய்லாந்து, சீனா ஆகியவற்றிலும் உணரப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்து பிரிந்து, ஆசிய கண்டத்துடன் இணைந்து உருவாகிய இமயமலையை நகர்த்தியபடி, ஏற்கனவே இந்திய துணைக்கண்டத்தின் டெக்கானிக் பிளேட்டுகள் நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும்பொருட்டு, மண் மற்றும் நீர் சேர்ந்த பகுதியில் அழுத்தம் அதிகமாகி, அதனால் நிலப்பரப்பு ஒன்றோடொன்று மோதி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பர்மாவில் மிகப்பெரிய சேதம்:

மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அங்குள்ள பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தாய்லாந்து நாட்டில் உள்ள பேங்காக் உட்பட முக்கிய நகரங்களில், அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்தன. மொத்தமாக சுமார் 6 க்கும் மேற்பட்ட முறைகள், ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளை கடந்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. பேங்காக்கில் நடந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பல வீடியோவாக வெளியாகியது. ஆனால், மியான்மர் எனப்படும் பர்மாவில், கடுமையான சட்டங்கள் காரணமாக சேதத்தின் அளவு தெரியவில்லை. சில வீடியோ மட்டுமே வெளியாகியுள்ளது. Surgical Scissor: 17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தி; பிரசவ சிகிச்சைக்கு பின் கொடுமை..! 

10000 பலி எண்ணிக்கையை கடக்கலாம்:

தாய்லாந்தில் நிலநடுக்கத்தை தாங்கும் அளவில் கட்டுமான பணிகள் நடக்கும் எனினும், மியான்மரில் அப்படி இருக்க வாய்ப்புகள் இல்லை. இதனால் அங்கு மிகப்பெரிய அளவு சேதம் நடந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் அமைப்பு, மியான்மர் நிலநடுக்கத்தால் மொத்தமாக 10000 உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளது. மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து மக்களை பெரும்பாலும் சடலமாகவே மீட்டு வருகின்றனர். இதனிடையே, ஐநா சபையின் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மருக்கு இந்தியா, ரஷியா, சீனா, சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகள் தங்களின் மீட்பு மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி இருக்கிறது.

துருக்கி நிலநடுக்கம் நினைவிருக்கா (Turkey Earthquake 2023)?

துருக்கி - சிரியா எல்லையில் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகள் வீதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால், 55 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இலட்சத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். துருக்கி-சிரியா நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணித்த டச்சு நிலவியல் ஆராய்ச்சியாளர் பிராங்க் ஹோகர்பீட்ஸ் (Frank Hoogerbeets), இந்தியா - பாகிஸ்தான் - நேபாளம் நாடுகளை ஒட்டிய நிலநடுக்க பகுதியில், எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் நடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துவிட்டார்.

இந்தியா தப்பிக்குமா? சிக்குமா?

அதனை உறுதி செய்யும் வகையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் நாடுகள் நிலநடுக்கத்தை 2023 - 2024 இடைப்பட்ட காலங்களில் நிலநடுக்கம் மற்றும் சேதத்தை எதிர்கொண்டது. இந்திய நிலப்பரப்பின் மீதுள்ள டெக்டானிக் தட்டுகளும் அந்நாடுகள் வழியே சென்று, பசுபிக் ரிம் பகுதியை அடைகிறது. அந்தவகையில், மியான்மரை மையமாக வைத்து 2025ல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா தனது இயற்கையான நிலப்பரப்பால் நடுவே பாதுகாப்பாக இருந்தாலும், எதிர்காலத்தில் அது பாதுகாப்பா? பாதிப்பா? என்பது பின்னாளில் தான் தான் தெரியவரும். அதேவேளையில், தேசிய அளவில் சென்னை, ஆந்திரா, மும்பை, டெல்லி ஆகிய பகுதிகளில் அவ்வப்போது திடீரென மிதமான நிலநடுக்கங்களும் உணரப்பட்டு வருகின்றன.

குப்பைகள் போல சிறிய அளவிலான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ள காட்சிகள்:

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியபோது, குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய செவிலியர்கள்:

334 அணுகுண்டு போடப்பட்டால் ஏற்படும் பதிப்பின் தொலைதூர தாக்கம்: