RCB Vs GT Highlights | IPL 2025 (Photo Credit: @IPL X)

ஏப்ரல் 02, பெங்களூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) கிரிக்கெட் தொடரில், இன்று (02 ஏப்ரல் 2025) பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - குஜராத் டைட்டன்ஸ் (Royal Challengers Bengaluru Vs Gujarat Titans IPL 2025) அணிகள் மோதும் ஆட்டம் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பௌலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவரில் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதனால் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கி வெற்றி அடைந்தது. RCB Vs GT Toss Update: ஐபிஎல் 2025: பெங்களூர் - குஜராத் அணிகள் மோதல்: டாஸ் வென்று குஜராத் பீல்டரிங்.! 

பெங்களூர் படுதோல்வி:

பெங்களூர் அணி சார்பில் விளையாடியவர்களில் சால்ட் 13 பந்துகளில் 14 ரன்கள், படிதார் 12 பந்துகளில் 12 ரன்கள், லிவிங்ஸ்டன் 40 பந்துகளில் 54 ரன்கள், ஜிதேஷ் ஷர்மா 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தனர். எஞ்சியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். குஜராத் அணியின் முகம்மது சிராஜ் பந்துவீசியில் அசத்தி 3 விக்கெட் எடுத்தார். சாய் கிஷோர் 2 விக்கெட் கைப்பற்றினார். பின் களமிறங்கிய குஜராத் அணியின் வீரர்கள் சாய் சுதர்சன் 36 பந்துகளில் 49 ரன்கள், ஜோஸ் பண்ட்லர் 39 பந்துகளில் 73 ரன்கள், ருதேர்போர்ட் 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற வைத்தனர். சொந்த மண்ணில் பெங்களூர் படுதோல்வி அடைந்தது.

அணிகள் மாறினாலும் செயல்கள் மாறவில்லை: