ஏப்ரல் 01, லக்னோ (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) கிரிக்கெட் தொடரில், நேற்று மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Mumbai Indians Vs Kolkata Super Giants IPL 2025) அணிகள் இடையே ஆட்டம் நடந்தது. இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி அடைந்தது. மும்பை அணியின் பந்துவீச்சாளர் அஸ்வனி குமார், தனது அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதனைத்தொடர்ந்து, இன்று (01 ஏப்ரல் 2025) பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Punjab Kings Vs Lucknow Super Giants) அணிகள் மோதுகிறது. பிபிகேஎஸ் Vs எல்எஸ்ஜி அணிகள் மோதும் ஆட்டம், லக்னோவில் உள்ள வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் செயலி (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சி சேனல்களில் காணலாம். MI Vs KKR Highlights: 13 ஓவர்களில் திரில் வெற்றி அடைந்த மும்பை; கொல்கத்தா படுதோல்வி.!
சூப்பர் ஜெயிண்ட்ஸ் எதிர் கிங்ஸ் (Super Giants Vs Kings):
இன்று லக்னோவின் வானிலையை பொறுத்தவரையில், பகல்நேர வெப்பநிலை 37 டிகிரி செல்ஸியஸ், இரவில் 19 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 5 கிமீ என்ற அளவில் இருக்கும். மழைக்கு வாய்ப்புகள் இல்லை. புள்ளிப்பட்டியலில் தொடர் 2 வெற்றியுடன் 3ம் இடத்தில் உள்ள லக்னோவும், 2ல் 1 தோல்வி என ஐந்தாம் இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியும் இன்று தங்களின் மூன்றாவது ஆட்டத்தில் மோதுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் (Punjab Kings IPL 2025 Squad) ஷ்ரேயஸ் ஐயர் கேப்டனாக இருக்கிறார். அணியில் ஸூர்யன்ஸ் ஷெட்ஜ், பிரியன்ஸ் ஆர்யா, பைலே அவினாஷ், ஹரனூர் பண்ணு, ஹூர்மூர் பானு, ப்ரபிசிம்ரான் சிங், விஷ்ணு வினோத், ஜோஷ் இங்கிலிஷ், குல்தீப் சென், ஹர்பீத் பரர், அஸ்மதுல்லா ஓமர்சாய், நிஹால் வதேரா, யாஷ் தாகூர், ஷஹாங்க் சிங், மர்கஸ் ஸ்டோனிஸ், ஆரோன் ஹார்டி, கிளன் மேக்ஸ்வெல், முஹீர் கான், மார்கோ ஜான்சன், யஷவேந்திர சாஹல், அர்ஷிதீப் சிங், விஜயகுமார், சேவியர் பார்லெட், பிரவின் துபே, லோக்கி பிரேக்குசோன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (LSG Squad IPL 2025) அணியில் ரிஷப் பண்ட் (Rishabh Pant), டேவிட் மில்லர், ஹிம்மத் சிங், ஏய்டன் மார்க்கம், ஆயுஷ் படோனி, நிகோலஸ் பூரான், மெத்திவ் ப்ரெட்ஸ், ஆர்யன் ஜுயல், அர்ஷின் குல்கர்னி, யுவராஜ் சௌதரி, மிட்செல் மார்ஷ், ஷநபாஸ் அகமத், அப்துல் சமத், ரஜ்வர்தன் காங்ரேக்கர், ஆகாஷ் தீப், ஷரத்துல் தாகூர், ஆவேஷ் கான், பிரின்ஸ் யாதவ், சமர் ஜோசப், திக்வேஸ் சிங், ரவி பிஷ்ணோய, எம் சித்தார்த், ஆகாஷ் சிங், மயங்க் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.