March 14: IPL 2025 | RCB Vs GT (Photo Credit: @IPL X)

ஏப்ரல் 02, பெங்களூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) கிரிக்கெட் தொடரில், இன்று (02 ஏப்ரல் 2025) பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - குஜராத் டைட்டன்ஸ் (Royal Challengers Bengaluru Vs Gujarat Titans IPL 2025) அணிகள் மோதும் ஆட்டம் நடைபெறுகிறது. இரவு 07:30 மணியவில் தொடங்கி நடைபெறும் ஆட்டத்தினை ஜியோ ஹாட்ஸ்டார் செயலி (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) ஆகிய தொலைக்காட்சி சேனலில் நேரலை காணலாம். GT Vs RCB: ஐபிஎல் 2025: இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs குஜராத் டைட்டன்ஸ் போட்டி.. பிற விபரங்கள் இதோ.! 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs குஜராத் டைட்டன்ஸ் (RCB Vs GT IPL 2025):

இந்நிலையில், போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டரிங் தேர்வு செய்தது. இதனால் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. சொந்த மண்ணில் குஜராத் அணிக்கு எதிராக வென்று பெங்களூர் தொடர்ந்த 3 வது வெற்றியை உறுதி செய்யுமா? என ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குஜராத் அணியின் சார்பில் (GT IPL Squad 2025) எஸ். கில், ஜெ. பட்லர், எஸ். சுதர்சன், எஸ்.கான், எஸ். கிஷோர், ஏ. கான், ஆர். திவேட்டியா, ஆர். கான், ஐ. ஷர்மா, பி. கிருஷ்ணா, எம். சிராஜ் ஆகியோர் விளையாடுகின்றனர். பெங்களூர் அணியின் சார்பில் பி. சால்ட், விராட் கோலி (Virat Kohli), டி. படிக்கல், ஆர். படிதார், எல். லிவிங்ஸ்டன், ஜெ. ஷர்மா, டி. டிராவிட், கே. பாண்டியா, பி. குமார், ஜெ. கேஸல்வுட், ஒய். தயல் ஆகியோர் விளையாடுகின்றனர்.

டாஸ் தோற்று பெங்களூர் அணி பேட்டிங்:

ராயல் சேலஞ்சர்ஸ் எதிர் டைட்டன்ஸ் அணிகள் போட்டிக்கு தயாரான காணொளி: