Ginger | Turmeric | Apple | Grapes | Garlic | Pomegranate (Photo Credit: Pixabay)

டிசம்பர் 25, சென்னை (Chennai News): நமது உடலின் வலிமைக்கும், இயக்கத்திற்கும் முக்கிய உறுப்பாக இருப்பது நுரையீரல். நுரையீரல் உடலை இயக்கத் தேவையான காற்றின் ஆற்றலை சுவாசமாக பெற்று, அதன் அடிப்படையில் பிற உறுப்புகளை தொடர்ந்து செயல்பட வழிவகை செய்கிறது. இன்றளவில் நுரையீரல் காற்று மாசு, புகைப்பழக்கம் என சுற்றுப்புற சூழலின் அசுத்தத்தன்மை காரணமாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. இதனால் நுரையீரல் சார்ந்த உடல்நல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் காற்று மாசு அதிகம் பிரச்சனைகளை தருகிறது. நுரையீரலை நலப்படுத்த நாம் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம். Sweet Banana Balls: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ரெசிபி.. வாழைப்பழ ஸ்வீட் உருண்டை செய்வது எப்படி..? 

பூண்டு (Garlic):

நச்சுக்களை நீக்கும் மூலப்பொருட்களை கொண்ட பூண்டு, அல்லிசின் (Allicin) எனப்படும் நச்சுக்களை அழித்து, அதற்கு எதிராக போராடவும் உதவி செய்கிறது. ஆஸ்துமா பிரச்சனைகளை நிவர்த்தி செய்யவும், நுரையீரல் சார்ந்த புற்றுநோயின் அபாயத்தை குறைக்கவும் வழிவகை செய்கிறது.

இஞ்சி (Ginger):

நச்சுக்கொல்லியை மூலப்பொருளாக தன்னிடம் கொண்ட இஞ்சி, அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியமானது ஆகும். இஞ்சி சுவாசக்குழாயில் இருக்கும் நச்சுக்களை அழிக்கும். Health Tips: கட்டி பெருங்காயம் நல்லதா? தூள் பெருங்காயம் நல்லதா? முழு விவரம் இதோ..!

மஞ்சள் (Turmeric):

பூண்டு மற்றும் இஞ்சியைப்போல மஞ்சளிலிலும் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. இதனால் உடலில் இருக்கும் நச்சுக்களையும் அழிக்கும் தன்மை உண்டு.

ஆப்பிள் (Apple):

அதிக வைட்டமின்களை சத்துக்களாக கொண்ட ஆப்பிளில் பிளாவனாயிடுகள் இருக்கிறது. இது சுவாச மண்டலத்தை வலுப்படுத்தும், நுரையீரல் நோய்கள் தாக்கத்தில் இருந்து மனித உடலை பாதுகாக்கும்.

பெர்ரி பழங்கள் (Berry Fruits):

பெர்ரி வகை உணவுகளில் பிளாக்பெர்ரி, புளூபெர்ரி, ராஸ்பெர்ரி ஆகியவற்றில் ஆண்டி-ஆக்சிடென்ட் அதிகம் இருக்கிறது. இவை நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும் தன்மை கொண்டது ஆகும். அதேபோல, நுரையீரல் சார்ந்த தொற்றுநோய் ஏற்படாத வண்ணமும் பாதுகாக்கும்.

திராட்சைப்பழம் (Grapes):

வைட்டமின்கள், மினரல் ஆகியவற்றை கொண்ட திராட்சைப்பழம் நுரையீரல் புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதேபோல, நுரையீரலையும் சுத்தப்படுத்தும். New Year Party Makeup: புத்தாண்டு பார்ட்டி கொண்டாட்டத்திற்கு ரெடியா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.! 

மாதுளைப்பழம் (Pomegranate):

உடலுக்கு தேவையான பல்வேறு மூலப்பொருட்களை கொண்ட மாதுளை, நுரையீரலில் ஏற்படும் வளர்ச்சியை தடுத்து, உடலை பாதுகாக்கும் குணம் கொண்டது. இதனால் நுரையீரலின் செயல்திறனும் அதிகரிக்கும்.

இவை தவிர்த்து பிஸ்தா, வரமிளகாய் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேற்கூறிய பொருட்களை சுழற்சி முறையில் நமது உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். சோடா, மது போன்ற பானங்களை தவிர்ப்பதும் நல்லது. கருப்பட்டி வெல்லமும் சாப்பிடலாம்.

குறிப்பு: மேற்கூறிய அறிகுறிகள் / தகவல்கள் பொதுவானவையே. உங்களுக்கு அதுசார்ந்த உடல்நலக்குறைவு / உடல் ஆரோக்கியம் தொடர்பாக சந்தேகம் இருப்பின், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம். அவரின் அறிவுறுத்தலின் பேரில் தேவைப்பட்டால் உடல் பரிசோதனை செய்து, மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப செயல்படலாம்.