டிசம்பர், 10: உடலை கவனமாக பார்த்துக்கொள்வதில் பாலின பாகுபாடு தேவையற்றது என்றாலும், பெண்கள் உடற்பயிற்சி செய்வதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. உடற்பயிற்சிக்காக (Exercise) ஓடுபவர்கள் ஓடும் விதத்தினை பார்க்க வேண்டும். ஓடும் தூரத்தினை பார்க்க கூடாது. அதிக நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் உடல்சோர்வு, உடல் வலி போன்றவையும் ஏற்படும். இது பயிற்சியில் ஈடுபடும் மனநிலையை பாதிக்க செய்யும். இதனால் அவ்வப்போது ஓய்வெடுப்பது அவசியம்.
ஓட்டப்பயிற்சியில் ஈடுபடும் முன் உடலினை சுய பரிசோதனை செய்ய வேண்டும். இதயம் மற்றும் அது சார்ந்த பிரச்சனைகள் இருப்போர், சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நடைப்பயிற்சி செய்தலே போதுமானது ஆகும். மருத்துவரின் ஆலோசனை பெற்று ஓட்டம் எடுக்கலாம்.
நடைப்பயிற்சி மற்றும் ஒட்டப்பயிற்சி செய்பவர்கள் பருத்தி மற்றும் அதுசார்ந்த இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம். இதனால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். சிந்தடிக் ரக ஆடையால் உடலின் மீது வியர்வை தங்கிவிடும். இதனால் உடல் குளிர்வாக இருப்பதுடன், வெப்பம் அதிகமாவதை தவிர்க்கும். Kirayapathiram: கிரயப்பத்திரம் பதிவு செய்வோர் கவனத்திற்கு.. இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டு போங்க..!
சாலையோரங்களில் பறிச்சியில் ஈடுபட்டால் ஒளிரும் தன்மை கொண்ட ஆடைகளை பயன்படுத்துவது நல்லது. கால்களுக்கு உகந்த எடை குறைவான காலனியை உபயோகம் செய்யலாம். புதிதாக உடற்பயிற்சி மேற்கொள்வோர் 2 நிமிடம் ஓட்டம், 1 நிமிடம் நடைப்பயிற்சி என மாற்றி செய்யலாம்.
இது இதயத்திற்கு தொடர்ந்து அதிக சிரமம் கொடுப்பதை தவிர்க்க வழிவகை செய்யும். ஆண்களை விட பெண்களின் உடலில் கொழுப்பு அதிகம் படியும் என்பதால், 35 வயதை கடந்திருக்கும் பெண்கள் ஜாகிங் செய்வது நல்லது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைகிறது. இரத்த ஓட்டம் சீராகிறது.
உடற்பயிற்சி செய்வதால் நாள் முழுவதும் துடிப்புடன் செயல்படலாம். உயர் இரத்த அழுத்த பிரச்சனையும் குறையும். உடலில் உள்ள சர்க்கரை அளவு குறையும். எலும்பின் அடர்த்தி அதிகரித்து, தசைகள் வலுப்பெறும். அதேபோல, எடுத்த எடுப்பில் கடுமையான உடற்பயிற்சி கூடாது.
இதனால் மூட்டுப்பகுதியில் இருக்கும் குருத்தெலும்பு தேய்ந்து வலியானது ஏற்படும். தொடக்கத்தில் இவ்வலியை உணர இயலாது என்றாலும், மாடிப்படியில் ஏறி இறங்கும் நேரத்தில் பாதிப்பை உணர வாய்ப்புண்டு. அதிக ஆர்வத்தில் கால்களிடம் அதிக பளுவினை கொடுப்பது சரியல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.