Sleeping Hyber Stress (PC: Pixabay)

டிசம்பர், 21: இன்றுள்ள நவீன யுகத்தில் மட்டுமல்லாது, பலநூறு ஆண்களுக்கு முன்பு இருந்து பெண்கள் உறங்கும் நேரம் (Women Sleeping) என்பது குறைவானது ஆகும். 70% பெண்கள் உறக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். ஆனால், அவர்களுக்கே தாங்கள் உறக்கமின்மையால் (Sleepiness) அவதிப்படுவது தெரிவது இல்லை.

பெண்கள் இன்றளவில் நினைத்தால் கூடஉறங்க நேரம் கிடைப்பது இல்லை. கணவன் - மனைவியாக வேலைக்கு செல்வது, தனிநபராக குடும்பத்தை தங்கி பிடிப்பது என ஓய்வில்லாமல் உழைத்து வருகின்றனர். சில நல்லுள்ளம் கொண்ட கணவர்கள் மனைவியுடன் வீட்டு வேலைகளை பங்கிட்டு துயர் துடைத்தாலும், பெண்களுக்கு கூடுதல் வேலை இருக்கத்தான் செய்கிறது.

அன்றைய நாளின் வேலையை முடித்துவிட்டு தாமதமாக உறங்க செல்வது, தாமதமாக சாப்பிடுவது, சாப்பிட்டதும் உறங்குவது என உடலுக்கு தீங்கான விஷயங்கள் தொடருகின்றன. இரவு நேர பணிகள் என்பவை யாருக்கும் ஒவ்வாதவை. பகலில் உழைப்பு இரவில் நல்ல உறக்கம் என்பதே இயற்கையின் படைப்புகளில் உள்ள நியதி. Solution of Stress: மன அழுத்தத்தால் சமநிலையை இழக்கும் சமூகம்.. அதிகரிக்கும் கொலைகள் & தற்கொலைகள்.. தீர்வு என்ன?..!

Women Eating

இந்த காலசக்கரத்தினை மாற்றி உடலை வருத்தி நாம் வேலைபார்க்க தொடங்கிவிட்டால், மனம் மற்றும் உடல் கடுமையாக பாதிக்கப்படும். நமது உறக்கத்தை பாதுகாக்கும் மெலட்டோனின் ஹார்மோன் இரவு நேரத்தில் சுரந்து, பகல் வேளையில் நம்மை சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.

இந்த செயல்பாட்டினை தலைகீழாக மாற்றினால் உடல்நலம் கேள்விக்குறியாகும். பெண்கள் உறங்கும் நேரம் குறைந்தால் எரிச்சல் ஏற்படும். உடல்ரீதியாக, மனரீதியாக பாதிப்பு ஏற்படும். அதன் தொடர்ச்சியாகவே எரிச்சல், கோபம், மனசோர்வு, மந்தம், மனச்சிக்கல், கண்களில் எரிச்சல், தீராத தலைவலி போன்றவை உண்டாகும். இந்நிலை தொடர்ந்தால் மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை பிரச்னையும் ஏற்படலாம்.

தூக்கமின்மை பிரச்சனையை தோற்க்கதிலேயே கண்டறிந்து சரிசெய்யாவிடில் இரத்த அழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம், சர்க்கரை வியாதி போன்றவற்றை ஏற்படுத்தும். ஆண்கள் தூக்கமின்மை பிரச்சனையின் முதல் தாக்கத்திலேயே அறிகுறியை உணர்ந்து மருத்துவரை நாடிவிடுகிறார்கள். பெண்கள் அதனை அலட்சியமாக எண்ணி அவதியுறுகிறார்கள். பின்னர், மாதங்கள் கடந்து உடல்நலக்கோளாறுகள் அதிகரித்ததும் மருத்துவரை நாடி ஆண்டுக்கணக்கில் சிகிச்சை பெறுகிறார்கள். ஆகையால், உறக்கம் என்பதை தவிர்க்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 21, 2022 08:10 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).