மார்ச் 28, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம், உத்தம் நகரில், தனியாருக்கு சொந்தமான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு கடந்த மார்ச் 21, நண்பகல் 12:30 மணியளவில் சிறுமி ஒருவரை இருவர் கும்பல் கடத்தி வந்தது. இருசக்கர வாகனத்தில் சிறுமியை கடத்திய கும்பல், விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. பின் சிறுமி அவரின் வீட்டருகே கொண்டு சென்று விடப்பட்டார். சிறுமி காணாமல் போனதாக பல இடங்களில் தேடிய பெற்றோர், அவர் மீண்டும் வந்ததும், நடந்ததை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். CA Final Exams: இனி ஆண்டுக்கு 3 முறை இறுதித்தேர்வு.. சிஏ தேர்வு முறையில் அதிரடி..!
4 பேர் கைது:
பின் சிறுமியின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ராகுல் கெளதம், அவரின் நண்பர் அவினாஷ் அசோக் ஆகியோர் கைது செய்ப்பட்டனர். மேலும், இறுதி உரிமையாளர் பகவன் மோர், மேலாளர் திகாராம் சப்கி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயம் குறித்து கைதான நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3