நவம்பர் 21, புலந்த்சாஹர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காவல்துறையில் பணியாற்றி வருபவர் சன்சால் (வயது 21). இவரின் கணவர் குல்தீப். தம்பதிகள் இருவரும் பிம்பிளிட் மாவட்டத்தில் உள்ள சயனா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள். சன்சால் தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார்.
அவருக்கு பிம்பிளிட் நகரில் உள்ள காவல் நிலையத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெண் காவலரின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்து வந்ததாக தெரியவருகிறது.
இதுதொடர்பாக தனது குடும்பத்தினரிடமும் அவ்வப்போது தகவலை பரிமாறி காவலர் மனவேதனை அடைந்து வந்துள்ளார். இந்நிலையில், 19ம் தேதி நள்ளிரவில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. Rajasthan Shocker: வீட்டுவாசலில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம்: மூவர் கும்பல் துணிகர செயல்.!
இதுதொடர்பான தகவல் பெண்ணின் பெற்றோருக்கு தெரியப்படுத்தவே, அவர்கள் விரைந்து வந்து மகளின் உடலை கண்டு கதறி அழுதுள்ளனர். மேலும், குல்தீப் மற்றும் அவரின் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்ததே மகளின் மரணத்திற்கு காரணமாக இருக்கும்.
மகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுகிறது என்றும் தங்களின் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக பெண் காவலர் சன்சாலின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.
வரதட்சணை கொடுமை என்பது இந்திய அளவில் பெண்களுக்கு எதிராக, மணமகனின் வீட்டில் உள்ளே பெண்ணே முன்வைக்கும் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது. இவ்வாறான செயல்கள் காரணமாக பல பெண்கள் உயிரிழந்து இருக்கின்றனர்.
தற்போது பெண் காவலரின் உயிரையே வரதட்சணை விவகாரம் பறித்துள்ளது அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.