Visual from Video (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 14, லக்னோ (Lucknow): இருசக்கர வாகனங்கள் நமது தேவைக்காகவும், விரைந்த பயணம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக கண்டறியப்பட்டன. இயந்திரங்கள் என்றாலே நமக்கு நன்மையையும், அதனை சரியாக பயன்படுத்தாவிடில் அல்லது பராமரிக்காவிடில் தீமையையும் தரவல்லவை.

அதிவேகத்தில் சென்றால் எப்போதும் நமக்கு ஆபத்து காத்திருக்கும். மிதவேகத்தில் சென்றால் விபத்து ஏற்படும் சூழ்நிலை வந்தாலும், நமது வாகனத்தை நாம் கட்டுக்குள் வைத்து விபத்தை தவிர்க்கலாம் அல்லது சிறு காயத்துடன் தப்பிக்கலாம். Meerut Gang Rape: 9ம் வகுப்பு பயிலும் மாணவி 2 சிறார்களால் பாலியல் பலாத்காரம்; பல நாட்களாக பின்தொடர்ந்து நடந்த பயங்கரம்.! 

இன்றளவில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் ஒவ்வொரு நபர்களும் தங்களின் இலக்கை நோக்கி அதிவேகத்தில் பயணிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவர்களில் சிலர் தங்களை பைக்கர்கள் என்று அறிமுகம் செய்து, அவர்களின் அலப்பறை சொல்லிமாளாது.

நமது குடும்ப உறுப்பினர்களையும், நண்பர்களையும் நாம் வாகனத்தில் அழைத்து செல்லும்போது அலட்சியமாக செயல்படாமல் சுதாரிப்புடன் இருப்பதே நன்மையை வழங்கும். இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ பகுதியில், அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கிய நபரால், அவரின் குழந்தைகளும் விபத்தில் சிக்கிய பதைபதைப்பு சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

விபத்திற்குள்ளான நபர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தை இயக்கி வந்தவர் நேரடியாக சுவரில் மோதியதால் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.