Railway Station Thiefs (Photo Credit: @RPFINDIA Twitter)

அக்டோபர் 18, விழிணகரம் (Social Viral): இரயில் பயணங்களின் போது எப்போதும் நாம் கவனமாக இருக்க வேண்டும். படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்வது, செல்போனை கையில் வைத்து ஜன்னலோரம் இருந்து பேசுவது, ரயில் படிக்கட்டில் நின்று கொண்டு பேசுவது போன்றவை திருட்டு அல்லது நமது உயிர் தொடர்பான விபரீதம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

இது தொடர்பாக பல்வேறு எச்சரிக்கைகள் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகத்தால் தெரிவிக்கப்படும். தற்போதுள்ள காலகட்டத்தில் சிசிடிவி கேமராக்கள் மூலமாக பல திருட்டு மற்றும் விபத்து சம்பவங்கள் தொடர்பான காணொளிகளும் அவ்வப்போது வெளியாகி பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் (Vizianagaram, Andhra Pradesh) மாநிலத்தில் உள்ள விழிணகரம் ரயில் நிலையத்தில், ரயில் ஒன்று தனது நிறுத்தத்தில் நின்று விட்டு பின்னர் மீண்டும் புறப்பட்டு மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அங்கு நோட்டமிட்ட 2 இளைஞர்கள் ரயில் மெதுவாக நகரும்போது தங்களின் திருட்டு செயலை அரங்கேற்றினர். 7th Pay Commission DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு உற்சாக செய்தி; அகவிலைப்படி 4% உயர்வு..! 

இரயில் மெதுவாக வரும்போது ஒருவர் விரைந்து சென்று ரயில் பெட்டியில் ஏறி, இரயிலில் பயணித்தவரின் பையை லாவகமாக திருடி வெளியே வந்தார். இரண்டு பேர் சேர்ந்து இந்த திருட்டு செயலை அரங்கேற்றிய நிலையில், அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

ரயில் பயணத்தில் நமது உடமைகளை நாம் கவனமுடன் பாதுகாத்து வைக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. அதேபோல, படிக்கட்டுக்கு அருகில் இருப்போர் சுதாரிப்புடன் இல்லாவிடில், நொடியில் அவர்களது பொருளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகவும் அமைந்துள்ளது.