Ram Idol Eyes Movement (Photo Credit: @tadasunil98 X)

ஜனவரி 23, புதுடெல்லி (New Delhi): 500 ஆண்டுகளுக்கு பின் ராமர் பிறந்த பூமியாக நம்பப்படும் அயோத்தி நகரில் ஸ்ரீ ராமர் கோவில் (Ram Mandir) அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. நேற்று பிரம்மாண்டமான முறையில் கோவில் திறப்பு விழா, கும்பாவிஷேகம் நடைபெற்றது. ராமர் கோவில் கும்பாவிஷேகத்திற்காக இந்தியாவில் உள்ள பல முக்கிய பிரமுகர்களும் அயோத்தி சென்று இருந்தனர்.

புத்துயிர் பெற்ற ஆன்மீக நகரம்: அயோத்தி (Ayodhya) நகரின் வரலாற்றை மீட்டெடுத்து அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வர எதுவாக, நவீன மயமாக்கப்பட்ட இரயில் நிலையம், சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அயோத்தி நகரின் சுற்றுலாவும் பன்மடங்கு பெருகி இருக்கிறது. அயோத்தியின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன. Heart Attack Death: ஹனுமான் வேடமிட்டு நடனமாடிய கலைஞர் மாரடைப்பால் மரணம்; நொடியில் பிரிந்த உயிர்..! 

சிற்பி அருண் யோகிராஜ்: அயோத்தி ராமர் கோவிலில் இருக்கும் ராமர் சிலையினை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் (Arun Yogiraj) வடிவமைத்தார். அவரின் கைவண்ணத்தில் உருவான ராமபிரானையே இன்று உலகம் தரிசித்து வருகிறது. கோவிலுக்கு நேரில் வர இயலாத உலகளாவிய பக்தர்களின் வசதிக்காக நேரலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

ஏஐ வீடியோ வைரல்: இந்நிலையில், தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ராமர் கண்களை (Ram Idol Eyes) திறந்து அங்கும்-இங்கும் பார்ப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமாக உருவாக்கப்பட்டதாக தெரியவரும் வீடியோ, ஸ்ரீ ராமரின் பக்தர்களிடையே புல்லரிப்பை ஏற்படுத்தும் விடியோவாக வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.