Visual Snipped from Video (Photo Credit: Twitter)

அக்டோபர் 04, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள முஜாபர்பூர் மாவட்டம், சந்திவாரா அலி மிஸ்ரா சாலையில் சம்பவத்தன்று பெண்மணி ஒருவர் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அவரை பின்தொடர்ந்தவாறு வந்த இளைஞர், பெண்ணுக்கு அருகில் சென்று துப்பாக்கியால் சுட்டு, தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த பெண்மணி யார்? அவரை கொலை செய்தது எப்படி? என விசாரணையை தொடங்கினர். நிகழ்விடத்தில் இருந்த கண்காணிப்பு கேமிராவும் ஆய்வு செய்யப்பட்டது. Bus Fire Accident: சுற்றுலாப்பயணிகள் பேருந்து விபத்திற்குள்ளாகி தீ பிடித்ததில் துயரம்: 21 பயணிகள் பரிதாப பலி..!

அப்போது, கேமிராவில் பெண்மணி தனியே நடந்து வந்துகொண்டு இருந்தார். அச்சமயம் அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபரான இளைஞர், பெண்ணுக்கு மிக அருகில் சென்று துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்.

இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே பெண்மணி பலியாகிவிட்டார். இதனையடுத்து, இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற மர்ம நபர் மற்றும் அவருக்கு உதவி செய்த இளைஞர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முஜாபர்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவதேஷ் தீக்ஷித் சம்பவ குறித்து தெரிவிக்கையில், "உயிரிழந்த பெண்மணி சஜிதா அஃப்ரீன் என்பதும், அவர் இரண்டு முறை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதும் உறுதியாகியுள்ளது. நிலத்தகராறில் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது" என கூறினார்.