Visual from Spot (Photo Credit: Twitter)

அக்டோபர் 04, இத்தாலி (World News): இத்தாலி நாட்டில் உள்ள வெனிஸ் நகரில், சுமார் 40 சுற்றுலாப்பயணிகளை ஏற்றுக்கொண்ட பேருந்து 50 அடி உயரமுள்ள மேம்பாலத்தின் வழியே சென்றுகொண்டு இருந்தது.

அப்போது, பேருந்து மேம்பாலத்தின் உச்சியில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புகளை மீறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில், மேம்பாலத்தின் கீழே இரயில் தண்டவாளம் சென்றுள்ளது. பேருந்து தண்டவாளத்திற்குள் விழவில்லை என்றாலும், மின் இணைப்புகளை உரசியபடி விழுந்து, பேருந்து தீப்பிடித்து எரிந்தது. Ram Charan at Siddhi Vinayak Temple: மஹாராஷ்டிராவில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ராம் சரண்.! 

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், துரிதமாக செயல்பட்டு பலரையும் மீட்டனர். இவ்விபத்தில் 21 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், 18 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் உயிரிழந்து இருக்கின்றனர்.

பேருந்தை 40 வயதுடைய இளைஞர் இயக்கி இருக்கிறார். அவரும் விபத்தில் பலியாகிவிட்டார். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளில் இத்தாலியில் நடந்த கோர விபத்துகளின் பட்டியலில், இவ்விபத்து தற்போது பல ஆண்டுகளை கடந்து இணைந்துள்ளது.