அக்டோபர் 23, நாமக்கல் (Namakkal News): நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருபவர் கே. பொன்னுசாமி (70). நேற்று இவர் வீட்டில் இருந்த நிலையில், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவதிப்பட்டதாக தெரியவருகிறது. உடனடியாக பொன்னுசாமியை மீட்ட குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அப்போது, சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாளைய வானிலை: தமிழகத்தில் தீவிரமாகும் பருவமழை.. மிக கனமழை கொட்டும் மாவட்டங்களின் லிஸ்ட்.!
சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ மறைவு (Namakkal Senthamangalam DMK MLA Ponnusamy Death):
அவரது மறைவு குடும்பத்தினர் மற்றும் திமுக தொண்டர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சேந்தமங்கலம் தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட பொன்னுசாமி வெற்றி அடைந்து சட்டப்பேரவைக்கு தேர்வானார். தற்போது, தனது 70 வயதில் மாரடைப்பு காரணமா உயிரிழந்து இருக்கிறார். விரைவில் திமுக தலைமை சார்பில் இரங்கல் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரும் நடைபெற்று முடிந்த நிலையில், எம்எல்ஏ காலமானார்.