Visual From Video (Photo Credit : @nadeemwrites X)

ஜூன் 08, அகமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், சிவம் அவாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி அபிஷேக் தோமர் என்பவர் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அபிஷேக்கை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தற்கொலை செய்வதாக மிரட்டிய குற்றவாளி :

அப்போது தன்னை காவல்துறையினர் கைது செய்ய வந்திருப்பதை அறிந்து கொண்ட அபிஷேக், அடுக்குமாடி குடியிருப்பின் பக்கவாட்டுக்கு வந்து ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி இருக்கிறார். இதனால் சுமார் 3 மணிநேரம் நீண்ட போராட்டம் நடத்தி போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் குற்றவாளியை கைது செய்துள்ளனர். Gas Cylinder Biometric: சமையல் எரிவாயு வாங்க இனி இது கட்டாயம் - அரசு அதிரடி அறிவிப்பு.! 

வேடிக்கை பார்க்க சூழ்ந்த மக்கள் :

குற்றவாளி தற்கொலை செய்யப்போவதாக அறிவித்த தகவலறிந்த பலரும் நிகழ்வு இடத்திற்கு விரைந்து இந்த காட்சிகளை வேடிக்கை பார்த்தனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குற்றவாளி மிரட்டியது தொடர்பான வீடியோ :