ஜனவரி 19, கவுந்தம்பாடி (Erode News): ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, கருங்கல்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன். இவரின் மகன் ராகுல் (வயது 27). இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ராகுல் டிக்கி என்ற பெயரில் 8 இலட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள நிலையில், மக்களை கவரும் வகையில் காமெடி, கலகலப்பு, ஏழைகளுக்கு உதவி செய்வது சார்ந்த வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வரவேற்பை பெற்றுள்ளார். இவரின் தந்தை இந்து மதத்தை சேர்ந்தவர், தாய் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் ஆவார்கள்.
அதிவேகத்தால் மரணம்:
அங்குள்ள கோபிசெட்டிபாளையம், கவுந்தம்பாடி, நேரு நகர் பகுதியில் வசித்து வருபவர் வேலுமணி. இவருக்கு 21 வயதுடைய தேவிகா ஸ்ரீ (Rahul Tiky Wife) என்ற இளவயது மகள் இருக்கிறார். ராகுல் டிக்கி (Ragul Tiky) - தேவிகா ஸ்ரீ இடையே, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்று முடிந்தது. புதுமணத் தம்பதிகள் பல எதிர்கால கனவுகளுடன் வாழ்க்கையை வாழத் தொடங்கி இருக்கிறது. இதனிடையே, கடந்த வியாழக்கிழமை இரவில் 10:15 மணிக்கு மேல் ராகுல் தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். மாமியார் வீட்டில் இருக்கும் மனைவியை அழைக்கச் சென்றபோது, அதிவேகத்தில் பயணித்த ராகுல், வாகனத்தை கட்டுப்படுத்த இயலாமல், சாலைத்தடுப்பில் மோதி 50 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். பல்சர் ஆர்.எஸ் 200 பைக்கில் சென்றபோது விபத்து நடந்தது. காவல்துறையினர் தரப்பு அவர் தலைக்கவசம் அணியவில்லை என கூறும் நிலையில், உறவினர்கள் அவர் தலைக்கவசம் அணிந்து இருந்தார் என கூறுகின்றனர். Rain Alert: இன்று 9 மாவட்டங்களில் கனமழை; அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கான வாய்ப்புகள் அறிவிப்பு.!
மாமியாரின் அதிர்ச்சி செயல்:
இதனிடையே, ராகுல் டிக்கியில் உடல், அவரது தாயின் விருப்பப்படி, இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால், மகனின் மரணத்திற்கு பின்னர் முற்றிலும் குணத்தை மாற்றிக்கொண்ட ராகுலின் தாயார், அவரது மனைவியிடம் இருந்து மகனின் ஆவணங்கள், இருசக்கர வாகனம், பரிசு, பிற சான்றிதழ் உட்பட அனைத்தையும் கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் ராகுல் டிக்கியின் மரணத்திற்கு பின்னர், திருமணமான புதிதில் தன்னை மகள் போல பார்த்துக்கொண்டு மாமியார், தற்போது ராகுலுடன் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தத்தை அழிக்க நினைப்பது போல செயல்பட்டு வருவதாக தேவிகா பரபரப்பு குற்றசாட்டு முன்வைத்து இருக்கிறார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியும் அளித்திருந்தார்.
தேவிகா ஸ்ரீ பரபரப்பு பேட்டி:
இதுதொடர்பான பேட்டியில், "நானும் - ராகுலும் இன்ஸ்டாகிராமில் சந்தித்து பேசிக்கொண்டோம். பின்னாளில் எங்களின் நட்பு காதலாக மாறியது. அவர் தனக்கு காதல் தோல்வி அடைந்ததாக கூறினார். எனது மாமியார் முஸ்லீம், மாமனார் இந்து என்றாலும், கணவருக்கு கருப்பு என்றால் மிகவும் பிடிக்கும். எங்களின் விருப்பப்படி நாங்கள் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டோம். திருமணத்திற்கு பின்னர் மாமியார் வீட்டில் நாங்கள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தோம். மாமியாரும் நன்றாக எங்களை பார்த்துக்கொண்டார். அப்போதுதான் ராகுலுக்கு முதல் மனைவி ஒருவர் இருப்பதும், அவருடன் விவாகரத்து பெற்றது தெரியவந்தது. அவரிடம் கணவர் முறையான விவாகரத்து பெற்றதாகவும் சான்றிதழை காண்பித்தார்கள். மேலும், ராகுல் என்னிடம் கூறும்போது, அம்மாவின் தொந்தரவு காரணமாக அவர் சென்றுவிட்டார் என கூறியதால், காதலித்துவிட்டோம் என ராகுலை உண்மை தெரிந்தபின்னும் ஏற்றுக்கொண்டேன். அவர்கள் இருவரும் 6 மாதம் குடித்தனம் நடத்தி இருக்கின்றனர். Sniffer Dog Astro Dies: மதுரை மத்திய சிறை மோப்ப நாய் ஆஸ்ட்ரோ மரணம்; 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்.!
மகனின் மரணத்திற்கு பின்னர் மாறிய தாயின் மனம்:
எங்களின் திருமணத்திற்கு பின்னர் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அவர் வீட்டில் இருக்கும்போது, தாயின் அனுமதியுடன் மதுபானம் வாங்கி வந்து அருந்துவார். அந்த செயலை நான் கண்டித்தேன். இதனால் எனக்கும் - மாமியாருக்கும் இடையே கருத்து முரண் ஆகியது. அவ்வப்போது ராகுல் போதையில் வந்து என்னையும், மாமியாரையும் தங்குவார். அனைத்தையும் அவருக்காக தாங்கிக்கொண்டேன். மதுவுக்கு எதிரான எனது கண்டிப்பு காரணமாக ஆத்திரமடைந்த மாமியார், எங்களை தனிக்குடித்தனம் செல்ல எங்களின் மீது பாசம் வைத்ததுபோல காய்களை நகர்த்தினார். நாங்களும் அவரின் அறிவுரைக்கேற்ப தனிக்குடித்தனம் சென்றோம். சமீபத்தில் நான் எனது அம்மாவின் வீட்டிற்கு வந்தேன். என்னை அழைக்க வந்தபோது தான் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருக்கிறார். ராகுலின் மரணத்திற்கு பின்னர் மாமியாரின் செயல்கள் மாறிவிட்டன. அவரை இந்து முறைப்படி நல்லடக்கம் செய்வோம் என கூறினேன். முதலில் சம்மதம் என பேசி அழைத்துச் சென்ற மாமியார், திரைமறைவில் தர்காவில் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகள் செய்து எங்களை வழியில் அழைத்துசென்றுவிட்டார்.
மாமியார் மாறிவிட்டார்:
அங்கு நான் எனது கணவரை பிடித்து அழக்கூடாது, தொட்டு கும்பிடக்கூடாது என பல விதிமுறைகள் விதிக்கப்பட்டு, எங்களின் முன்னிலையில் கணவரின் உடல் அவர்களின் வழக்கப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. என் மீது தவறு உள்ளது போல பல அவதூறு வார்த்தைகளை மாமியார் உபயோகம் செய்தார். தற்போது எனது கணவரின் அடையாள ஆவணங்கள், சான்றிதழ், பரிசுகள், இருசக்கர வாகனம் போன்றவற்றை கேட்கிறார். எனது கணவருடன் நான் வாழ்ந்தேன் என்பதற்கு அடையாளமாக இவை தான் இருக்கின்றன. இன்று அதனை கேட்கிறார்கள். எனக்கு பிள்ளை போல இரு என்று கூறினால், ஒருகட்டத்தில் நானே அதனை அவர்களிடம் ஒப்படைத்து பிள்ளையாக இருந்திருப்பேன். ஆனால், அதனை விட்டுவிட்டு அவர்கள் எனது கணவருடன் வாழ்ந்த வாழ்க்கையை கேட்கிறார்கள். இது எப்படிப்பட்டது என எனக்கு தெரியவில்லை. எனக்கு நியாயம் வேண்டும். தேதியும் தள்ளிச்சென்றுதால், கர்ப்பம் குறித்த விஷயமும் இருக்கிறது. நான் இன்னும் மருத்துவமனைக்கு சென்று பார்க்கவில்லை. மாமியாரின் செயல்பாடுகள் மாற்றம் அடைந்துள்ளது. அன்று எனக்கு ஆறுதலாக இருந்த மாமனார், மாமியார் என்னை கைவிட்டு அனாதை போல ஆக்கிவிட்டனர்" என கூறினார்.
ராகுலின் இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளாகிய பின் எடுக்கப்பட்ட காணொளி:
#rip #ripriggyg #rahultiky pic.twitter.com/0nuyzASTUW
— 𝐊𝐔𝐓𝐓𝐘⚔️ᵗʷᵉᵉᵗᶻ (@kutty_tweetz) January 17, 2025