Volcano Lightning Attack Video (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 21, கௌதமாலா (Guatemala): மத்திய அமெரிக்காவில் உள்ள கௌதமாலா நகரில் அகாடெனங்கோ எரிமலை (Acatenango Volcano) இருக்கிறது. சமீபத்தில் இந்த எரிமலை லேசான வெடிப்புக்கு உள்ளாகியது.

இந்நிலையில், எரிமலை வெடிப்பின்போது, அதனை சுற்றியிருந்த மேகக்கூட்டங்களில் இருந்து வானைப்பிளந்து மின்னல் கீற்றுகள் தோன்றின. தலைகீழாக இந்த மின்னல்கள் தென்பட்டன. Gangnani Bus Accident: 50 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்து.. சுற்றுலா பயணிகள் 7 பேர் பலி., 28 பேர் படுகாயம்.!

வானில் மேகங்கள் எரிமலை வெளிப்பாடின் போது இசை நிகழ்ச்சியில் இருந்து ஒளி பதிவு செய்யப்பட்டதை போல கண்களை ஈர்த்தன. இதனை எதற்ச்சையாக படம் எடுத்தவர் விடியோவாக பதிவு செய்யவே வைரலாகி வருகிறது.

இயற்கை எப்போதும் அமைதியாக இருப்பது இல்லை எனினும், அதன் செயலை செவ்வனே செய்கிறது. என்றுமே நடுநிலைக்கும், நடுநிலைப்படுத்தும் செயலுக்கும் உதாரணமாக இருக்கும் இயற்கை தலைசிறந்து வணங்க வேண்டியது, போற்றி பாதுகாக்கப்படவேண்டியது தான்.