Himachal Pradesh Rains (Photo Credit: Twitter)

ஜூலை 10, விகாஷ் நகர் (Himachal Pradesh): தென்மேற்கு பருவமழை இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களை புரட்டியெடுத்து வருகிறது. இமயமலையை ஒட்டி அமைந்துள்ள உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம் (Himachal Pradesh Rains) உட்பட பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. தொடர் கனமழையால் அங்குள்ள பல ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மாநில அரசு சார்பில் மக்களை பாதுகாக்க உயர்வான இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் மழையால் அங்குள்ள ஆறுகள், ஏரிகள், அணைகள் நிரம்பி வழிவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. Jawan Prevue: ஷாருக்கானின் அதிரடி ஆக்சனில் தெறிக்கும் திரை; அட்லீயின் ஜவான் திரைப்பட முன்னோட்டம் வெளியீடு.! லிங்க் உள்ளே..!

Himachal Pradesh Rain River Flood (Photo Credit: Twitter)

இதனால் கரையோர பகுதிகளை தொட்டவாறு வெள்ளநீர் ஆற்றில் செல்கிறது. இந்நிலையில், ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தின் விகாஷ் நகர் பகுதியில் டெஹ்ராடூன் நோக்கி சென்ற மாநில அரசு பேருந்து (Himachal Pradesh Roadways Bus) ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது.

நல்வாய்ப்பாக பேருந்து மறுகரையை அடைய சில அடி தூரத்தில் நீரை இழுத்து செல்லப்பட்டது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் அவசர கதியில் வெளியேறினர். ஆற்றை கடக்கும் ஆசையில் பேருந்தின் மேலே ஏறி பயணம் செய்த பயணிகளும், அப்படியே கீழே குதித்து கரையேறினர்.

இந்த பதைபதைப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன.