Arani 4 Children's Drowned into Water on 18-Sep-2024 (Photo Credit: @TheHinduTamil X)

செப்டம்பர் 18, ஆரணி (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி (Arani), அடையப்புலம் கிராமம், அண்ணா நகரில் வசித்து வருபவர் குப்புசாமி (வயது 45). இவர் கூலித்தொழிலாளி ஆவார். குப்புசாமியின் மனைவி அஞ்சலை (வயது 42). தம்பதிகளுக்கு மோகன்ராஜ் (வயது 13) என்ற மகனும், வர்ஷா (வயது 9) என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் அங்குள்ள அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு மற்றும் நான்காம் வகுப்பு பயின்று வந்துள்ளனர். இதே பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி விநாயகம் (வயது 36), இவரின் மனைவி செல்வி (வயது 32). தம்பதிகளுக்கு கார்த்திகா (வயது 8), தனிஷ்கா (வயது 4) என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் கார்த்திகா பள்ளியில் மூன்றாம் வகுப்பும், தனிஷ்கா அங்கன்வாடியிலும் படித்து வருகிறார்கள். நேற்று மிலாடி நபி காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இருந்தது. Kakka Thoppu Balaji: மீசை முளைக்காத வயதில் ரௌடி ஆசை; 36 வயதில் என்கவுண்டரில் பலி.. யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி.!

நால்வரும் நீரில் மூழ்கி பரிதாப பலி:

இதனால் மேற்கூறிய இரண்டு குடும்பத்தை சேர்ந்த 4 சிறார்களும், மாலை 05:00 மணியளவில் ஓடைத்தாங்கல் ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளனர். பின் அவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனிடைய, அங்கு இளைஞர்கள் குழு கிரிக்கெட் விளையாட சென்றது. அப்போது, ஏரிக்கரையில் சிறார்களின் செருப்பு, உடை இருந்துள்ளது. அங்கு சிறார்கள் இல்லாததை கண்டு சந்தேகமடைந்தவர்கள், ஏரிக்குள் சென்று பார்த்தபோது நால்வரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த விஷயம் குறித்து ஆரணி காவல்துறையினருக்கும், சிறார்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த பெற்றோர், குழந்தைகளின் உடலைக்கண்டு கதறியழுதது சோகத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த ஆரணி காவல்துறையினர், சிறார்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீர்நிலைகளுக்கு குழந்தைகளை பெற்றோர் அனுப்பாமல் இருப்பதும், அப்படியே அனுப்பினாலும் அவர்களுடன் நீச்சல் தெரிந்த நபர்கள் செல்ல வேண்டும் எனப்தையே இந்த துயரம் உணர்த்துகிறது.