மார்ச் 30, சித்தோடு (Erode News): ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு, காளிங்கராயன்பாளையம், கோணவாய்க்கால், லட்சுமி நகர் பகுதியில் வாகனங்களை சுத்தம் செய்யும் வாட்டர் சரீவ்ஸ் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை தரணி என்பவர் நடத்தி வருகிறார். கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாட்டர் சர்விஸ் நிலையம் இருப்பதால், பல கனரக வாகனங்களும் இங்கு வந்து செல்கின்றன. இதனிடையே, இன்று ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு சாயக்கழிவை சுத்தம் செய்யும் அமோனியம் குளோரைடு பாரம் ஏற்றி வந்த லாரி, மீண்டும் ஆந்திரா நோக்கி புறப்பட தயாரானது. அதற்காக வாகனத்தை சுத்தம் செய்ய தரணியின் நிறுவனத்திற்கு வந்தது. வானிலை: வெளுக்கப்போகும் கோடை மழை.. கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
இருவர் பலி, ஒருவருக்கு சிகிச்சை:
அப்போது, வாகனத்தை சுத்தம் செய்யும் பணியாளர்கள் முருகானந்தன், சந்திரன், செல்லப்பன் ஆகியோர் பணியில் இருந்தனர். இவர்கள் மூவரும் வாகனத்தின் டேங்கருக்குள் இறங்கி சுத்தம் செய்துகொண்டு இருக்கும்போது, விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், முருகானந்தம், சந்திரன் ஆகியோரை சடலமாக மீட்டனர். மேலும், உயிருக்கு போராடிய செல்லப்பன் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.