Fish Festival (Photo Credit: @NewsMeter_In X)

மே 22, ஹைதராபாத் (Hyderabad News): உலகளவில் கொடிய சுவாச நோயாக கருதப்படும் ஆஸ்துமா காரணமாக அவதிப்படும் பலரும், மருந்து-மாத்திரைகளை உட்கொண்டு தங்களின் வாழ்நாட்களை எண்ணி வருகின்றனர். இதனை சரி செய்ய மருத்துவ சிகிச்சைகள் பின்பற்றப்படுகிறது எனினும், ஒருசிலர் நாட்டு வைத்தியங்களையும் பின்பற்றுகின்றனர். ஆனால், மீன் கொண்டு (Fish Medicine For Asthma) ஆஸ்துமாவை குணப்படுத்தும் திருவிழா குறித்து உங்களுக்கு தெரியுமா?. நமது இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள பாத்தினி குடும்பத்தினர், பாரம்பரியமாக மீன் கொண்டு ஆஸ்துமாவுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மீன் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் மீன் ஆஸ்துமாவை குணப்படுத்துவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மீன் திருவிழா ஜூன் மாதம் 08ம் தேதி காலை 11 மணியளவில் தொடங்கி, ஜூன் மாதம் 09ம் தேதி காலை 10 மணிவரையில் நடைபெறுகிறது. இதன்போது ஆஸ்துமா மற்றும் சுவாசம் சார்ந்த பிரச்சனைகள் கொண்ட நோயாளிகளுக்கு, பாத்தினி குடும்பத்தினர் மீன்களை பிரசாதமாக விநியோகம் செய்கின்றனர். பருவமழை தொடங்குவதை குறிக்கும் மிருகசீர கார்த்திகை நாளில் மீன் பிரசாதம் வழங்கப்படுகிறது. Pushpa 2 Second Single: புஷ்பா படத்தின் இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அறிவிப்பு: படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு.! 

மூலிகையுடன் மீனை பிரசாதமாக வழங்கும் குடும்பம்: முரல் மீன் மற்றும் மூலிகை உருண்டை ஆகியவை மீன் பிரசாதமாக கடந்த 178 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு மாநில அரசு விழாக்கான ஏற்பாடுகளை செய்து தரவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வழங்க வேண்டிய மீன், மூலிகை ஆகியவை தயார்நிலையில் இருப்பதையும் விழாக்குழு உறுதி செய்துள்ளது. அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உயிருடன் இருக்கும் மீனை, மஞ்சள் நிறத்திலான பிரசாதத்துடன் சேர்த்து இவர்கள் வழங்குகிறார்கள். சைவ உணவு சாப்பிடுவர்களுக்காகவும் பிரத்தியேக வெல்ல உருண்டை தயார் செய்யப்படுகிறது. இதற்கு பின்னர் அங்கு வழங்கப்படும் மூலிகை மருந்தை பத்தியம் இருந்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா சரியாகும் எனவும் நம்பப்படுகிறது. மருத்துவ ரீதியாக மீன் மருந்து என்பது ஆஸ்துமாவை குணப்படுத்துகிறதா? என்பதை உறுதி செய்யவில்லை என்றாலும், அவர்களை நம்பி வரும் பக்தர்களுக்காக தொடர்ந்து ஆஸ்துமாவை குணப்படுத்த மீன் மருந்து வழங்ப்படுகிறது.